தக்காளி கோதுமை தோசை

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்கோதுமை மாவு
  2. 2தக்காளி
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. தேவைக்குஉப்பு
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. 1/2 ஸ்பூன்ஜீரகம்
  8. சிறிதளவுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி, மல்லி இலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

  3. 3

    பின்னர், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் அரைத்த உப்பு, தக்காளி,வெங்காயக் கலவை, ஜீரகம், நறுக்கிய மல்லி இலை போட்டு தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.

  6. 6

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes