தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 300 கிராம்சூரா மீன் -
  2. நெல்லிக்காய் அளவுபுளி - பெரிய
  3. 5சின்ன வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2மிளகாய்
  6. 2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  7. 1 தேக்கரண்டிமீன் குழம்பு மசாலா
  8. 2 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  9. 2 தேக்கரண்டிமல்லித்தூள்
  10. 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  11. 1 கப்தேங்காய்
  12. 1/2 தேக்கரண்டிகடுகு
  13. 1/2 தேக்கரண்டிவெந்தயம்
  14. 3 மேஜைக்கரண்டிதேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாய் சூடேற்றி அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

  2. 2

    எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும், கடுகு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்.

  3. 3

    வெந்தயம் பொன்னிறமாக மாறியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயத்தின் ஓரங்கள் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மீன் குழம்பு தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து 2 மேஜைக்கரண்டி தண்ணீர் 1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கி கொள்ளவும்.

  6. 6

    இஞ்சி பூண்டு விழுது வாடை போனதும் மசாலா கலவையை‌ தாலிப்பில் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

  7. 7

    3 நிமிடத்திற்கு பிறகு புளி கரைசல், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.

  8. 8

    தக்காளி நன்கு மசிந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்.

  9. 9

    1 கப் தேங்காயில் இருந்து முதல் பால் இரண்டாம் பால் என எடுத்துக் கொள்ளவும்.

  10. 10

    மீன் நன்றாக வெந்ததும் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து 1 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

  11. 11

    பின்னர் முதல் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

  12. 12

    எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

  13. 13

    சூரா மீன் குழம்பு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes