மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)

Belji Christo
Belji Christo @cook_20603733

மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 500 கிராம் மீன்
  2. 200 கிராம் சின்ன வெங்காயம்
  3. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 4பச்சை மிளகாய்
  5. 1தக்காளி
  6. 2துண்டு குடம் புளி
  7. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. 1 தண்டுகறிவேப்பிலை
  11. 1 டீஸ்பூன் வெந்தயம்
  12. 1 டீஸ்பூன் கடுகு
  13. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீன் சுத்தம் செய்து சிறிய துண்டாக வெட்டி வைக்கவும். மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும். குடம்புளி 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். மண் சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பின் கடுகு மற்றும் வெந்தயம் போடவும். கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு வெடித்த பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  2. 2

    இதுல நாலு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு தக்காளி நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும். வெந்தபின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்பு புளியுடன் சேர்த்து புளித்தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

  3. 3

    இப்போ மீன் துண்டுகளை குழம்பில் சேர்க்கவும். மீன் வந்தபின் கருவேப்பிலை போட்டு இறக்கவும். சுவையான மீன் குழம்பு தயார் ஆயிடுச்சு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Belji Christo
Belji Christo @cook_20603733
அன்று

Similar Recipes