எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்ராகி மாவு
  2. 1கப் சுத்தம் செய்த முருங்கைக் கீரை
  3. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  4. 1 பச்சை மிளகாய் நறுக்கியது
  5. 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  6. 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  7. 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  8. 1/4 கப் அரிசி மாவு
  9. தேவையானஅளவு உப்பு
  10. தேவையான அளவு தண்ணீர்
  11. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்று தளரப் பிசையவும்.

  2. 2

    பிசைந்த மாவை அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

  3. 3

    பிசைந்த மாவை சம அளவில் உருண்டைகளாக்கவும்.

  4. 4

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக அடையாகத் தட்டவும்.

  5. 5

    சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    சட்னி அல்லது சாம்பாரோடு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes