சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் துருவிய கேரட் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்
- 2
அரிசி மாவு கலவையுடன் பொடியாக அரிந்த இஞ்சி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் பொடியாக அரிந்த பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
வெங்காயம் கேரட் துருவல் இஞ்சி சீரகம் உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 4
நன்கு பிசைந்த மாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 5
இப்பொழுது தோசை தவாவில் தண்ணீர் தெளித்து பிறகு எண்ணை துணியால் தேய்த்து மாவை ஒரு உருண்டையாக எடுத்து தோசை கல்லில் ரொட்டியாக தட்டவும்
- 6
மேல்புறம் வேகும் பொழுது எண்ணெய் ஊற்ற தேவையில்லை திருப்பி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைத்து ரொட்டி வெந்தவுடன் எடுத்தாள் அருமையான சுவையான கர்நாடகா ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் அக்கி ரொட்டி தயார்😋😋😋
Similar Recipes
More Recipes













கமெண்ட்