மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)

Mangala Gowri
Mangala Gowri @cook_18828587

மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3/4 கப் கடலை மாவு
  2. 2 1/2 கப் சீனி
  3. 2 1/2 கப் நெய்
  4. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உருக்கிய நெய் மற்றும் சலித்த கடலை மாவை நன்கு கலந்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து சீனியையும் சீனி மூழ்கும் அளவுக்கு தண்ணீரையும் சேர்க்கவும். சீனி நன்கு கரைந்து, ஒரு கொதி வரும் போது, குமிழ் குமிழாக தோன்றும்.

  3. 3

    அந்த நேரத்தில் மாவு நெய் கரைசலை விட்டு நன்கு கைவிடாமல் கிளற வேண்டும். ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கொள்ளவும். அடிபிடிக்காமல் கிளற வேண்டும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். 10 அல்லது 15 நிமிடத்தில் மைசூர் பாக் கலவை கலர் மாறி, ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும். நெய் தடவிய தட்டில் கொட்டி சற்று சூடு குறைந்ததும் வேண்டிய வடிவில் கத்திக் கொண்டு, கீறி விடவும். நன்கு ஆறிய பின்னர், கீறி விட்ட இடத்தில் கத்தியால் அழுத்தம் கொடுத்தால் துண்டுகள் உடையாமல் வரும். இது மிகவும் சாஃப்ட் மைசூர் பாக்

  4. 4

    பின் குறிப்பு: நான் செய்யும் போது 1 கப் மாவு, 2 கப் சீனி 2 கப் நெய் என்று குறைத்துக் கொள்வேன்.

  5. 5

    இதையே மாவை நன்கு சலித்து விட்டு சற்று சிவக்க வறுத்து செய்யும் போது, கடையில் கிடைக்கும் தேன்கூடு வகை டிசைனாக வரும். மேலும் பால் பவுடர் ஒன்றிலிருந்து இரண்டு டேபிள்ஸ்பூன் கலந்து விட, மில்க்கி டேஸ்ட் கிடைக்கும். பாதாம் பவுடர் கலந்து செய்ய, சுவை மேலும் அதிகரிக்கும்.

  6. 6

    இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட 1 கிலோ மைசூர் பாக் கிடைக்கும்.

  7. 7

    இந்த பலகார குறிப்பை 1996 ஆம் ஆண்டு மங்கையர் மலர் பத்திரிக்கையில் பார்த்து நான் செய்ய ஆரம்பித்தேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mangala Gowri
Mangala Gowri @cook_18828587
அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அசத்தல் ரெசிபி . ரெசிபியின் படத்தை உடன் இணையுங்கள் சகோதரி

Similar Recipes