அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 5அவித்த முட்டை - 5
  2. 1முட்டை - 1
  3. 1 மேஜைக்கரண்டிஎண்ணெய் -
  4. 1சீரகம் -
  5. சிறிதுகருவேப்பிலை -
  6. 10சின்ன வெங்காயம் - 10
  7. சின்ன துண்டுஇஞ்சி
  8. 4 பல்பூண்டு
  9. 1/2 தேக்கரண்டிகசகசா
  10. 1/2 தேக்கரண்டிசோம்பு
  11. 1/2 தேக்கரண்டிமிளகு
  12. 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  13. 1 தேக்கரண்டிமல்லி தூள்
  14. 1/2 தேக்கரண்டிசீரகத்தூள்
  15. 2 தேக்கரண்டிகறி மசாலா
  16. 2 நறுக்கியதுதக்காளி
  17. 1/2 கப்தேங்காய் பூ
  18. 1/2 நறுக்கியதுவெங்காயம்
  19. 1பிரியாணி இலை
  20. 1அன்னாசி பூ
  21. சிறிய துண்டுபட்டை
  22. 3ஏலக்காய், கிராம்பு
  23. 1/2 தேக்கரண்டிசோம்பு, சீரகம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரே கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் கருவேப்பிலை சின்ன வெங்காயம் கசகசா சோம்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கியதும் மசாலா பொருட்கள் தக்காளி சேர்த்து வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    மசாலா வாசனை தக்காளி வாசனை போனதும் தேங்காய் பூ சேர்த்து வதக்கவும். தேங்காய் வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.

  4. 4

    சூடு போனதும் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். நல்ல பசையாக அரைத்து எடுக்கவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, அன்னாசி பூ, சோம்பு சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும், சிறிது வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் அரைத்து வைத்துள்ளதை சேர்க்கவும்.

  6. 6

    5 நிமிடம் கொதிக்க விடவும், 5 அவித்த முட்டைகளை குழம்பில் போடவும் 1 முட்டையை மட்டும் உடைத்து ஊற்றவும்.

  7. 7

    உடனேயே கலக்காமல் 5 நிமிடம் கழித்து கலக்கி விடவும். கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes