தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

அசைவ உணவு வகைகள்

தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோகோழி
  2. 1 கப்கட்டி தயிர்
  3. 1 துண்டுஇஞ்சி
  4. 8 பல்பூண்டு
  5. 1 டேபிள் ஸ்பூன்சோம்பு
  6. 1/2 டேபிள் ஸ்பூன்நல்ல மிளகு
  7. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  9. 1/2 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள்
  10. 1/2 டேபிள் ஸ்பூன்ஜீரக தூள்
  11. 1 டேபிள் ஸ்பூன்லெமன் ஜூஸ்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  14. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா
  15. கொஞ்சம்மல்லித்தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் ‌.

  2. 2

    இஞ்சி, பூண்டு, சோம்பு, நல்ல மிளகு இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இந்த அரைத்த மசாலாவும், மேற்கூறிய எல்லா மசாலா தூள்களும், தயிரும், தேவைக்கு உப்பும் கோழியில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  5. 5

    எண்ணெய் சூடானதும் ஊற வைத்த கோழியைச் சேர்த்து நன்றாக வேக விடவும்.

  6. 6

    தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவை இல்லை.தயிரில் உள்ள தண்ணீரிலேயே கோழி வெந்து விடும்.

  7. 7

    தயிர் சிக்கன் கிரேவியாக வேண்டும் என்றால் கிரேவியாக இறக்கவும்.ட்ரையாக வேண்டும் என்றால் தண்ணீர் வற்றி கொஞ்சம் ட்ரை ஆனதும் கரம் மசாலா தூளையும், லெமன் ஜூஸையும் சேர்த்து நன்றாகக் கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.

  8. 8

    சுவையான தயிர் சிக்கன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes