ஆனியன் சிக்கன் (Onion CHicken Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிய வைக்கவும்.
- 2
ஒரு பவுளில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, லெமன் ஜூஸ் இவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 3
இந்த மசாலாவில் சிக்கனை சேர்த்து நன்றாகப் புரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
அரைப்பதற்கு உள்ள எல்லாப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்ட் பருவத்தில் ஆக்கிக் கொள்ளவும்.
- 5
மூன்று பெரிய வெங்காயத்தை நைஸாக வெட்டி, ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்து எடுக்கவும்.
- 6
பொரித்து எடுத்த வெங்காயத்தை ஒரு கிச்சன் டிஷுவில் எண்ணெய் வடிய வைக்கவும்.
- 7
பொரித்த வெங்காயம் ஆறியதும், நாலில் ஒரு பங்கை எடுத்து விட்டு, ஒரு பங்கை கார்னிஷ் செய்ய மாற்றி வைக்கவும்.
- 8
வெங்காயம் பொரித்த எண்ணெயில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்து ஒரு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை கோல்டன் ப்ரவுன் கலரில் வதக்கவும்.
- 9
இதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து பச்சை மணம் மாறும் வரை வதக்கவும்.
- 10
இதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி வேக வைக்கவும்.
- 11
இதில் ஊற வைத்த சிக்கனை சேர்க்கவும்.பொரித்த வெங்காயத்தை கை வைத்து நன்றாக பொடித்து இதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.
- 12
இப்போது கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கிளறி. கொடுக்கவும்.
- 13
கடாயை மூடி வைத்து மீடியம் ஃப்ளேமில் சிக்கனை வேக விடவும்.
- 14
சிக்கன் வேகும் வரை அடிக்கடி கிளறிக் கொடுக்கவும்.
- 15
சிக்கன் வெந்து ரெடியாகி வரும் போது கறிவேப்பிலையையும், அவித்த பட்டாணியையும், பொரித்த வெங்காயத்தையும் சேர்த்து கார்னிஷ் செய்து இறக்கவும்.
- 16
16.சோறு, சப்பாத்தி, அப்பம் இதனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
-
-
-
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
-
-
-
-
-
-
-
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்