மாஇஞ்சி மல்லி இலை சூப்(Maa inji ilai soup recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#சூப் ரெசிப்பிஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
4ll பேருக்கு
  1. இஞ்சிமாங்காய் 50 கிராம்
  2. மல்லி இலை கைப்பிடி அளவு
  3. 2பச்சை மிளகாய்
  4. பூண்டு 10 பல்
  5. வெள்ளை மிளகு 2 ஸ்பூன்
  6. சாட் மசாலா ஒரு ஸ்பூன்
  7. வெண்ணை இரண்டு ஸ்பூன்
  8. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  9. எலுமிச்சை சாறு நாலுஸ்பூன்
  10. கருப்பு உப்பு தேவையான அளவு
  11. தேவைப்பட்டால் சிறிது அஜினமோட்டோ

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் இஞ்சி மாங்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி இடி கல்லில் நசுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு பச்சை மிளகாய் வெள்ளை மிளகு ஆகியவற்றை தனித்தனியாக இடித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடையில் ஒன்றரை ஸ்பூன் வெண்ணை போட்டு உருவியதும் பச்சை மிளகாய் விழுது போட்டு வதக்கவும் பிறகு நசுக்கிய பூண்டு மா இஞ்சி இவற்றை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும் பிறகு ஒருகப் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் மூடிவைத்து 5 நிமிடம் வேகவிடவும். பிறகு பாதி மல்லி இலை 3 கப் தண்ணீர்சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்

  3. 3

    கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் கலவையுடன் சேர்க்கவும் பிறகு இடித்து வைத்த வெள்ளை மிளகுத்தூள் பொடியாக நறுக்கிய மல்லி இலை சாட் மசாலா கருப்பு உப்பு சேர்த்து கலந்து விடவும் இவை அனைத்தும் சேர்ந்து வரும்பொழுது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி வடிகட்டி சூப் பவுலுக்கு மாற்றி பரிமாறவும். பிறகு அதன்மேல் சிறிது வெண்ணெயும் மல்லி இலை சேர்த்து பருகக் கொடுக்கவும். கமகமக்கும் சுவையான சூப்பரான மா இஞ்சி மல்லி இலை சூப் ரெடி.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes