நாவில் கரையும் ஸ்வீட்  பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 minutes
2 பரிமாறுவது
  1. 1 டம்ளர்பச்சரிசி
  2. 4 டம்ளர்தண்ணீர்
  3. 1 டம்ளர்பால்
  4. 1 1/2 டம்ளர்வெல்லம்
  5. தேவையான அளவுமுந்திரி பருப்பு
  6. தேவையான அளவுஉலர் திராட்சை
  7. 1/2 ஸ்பூன்ஏலக்காய் தூள்
  8. தேவையான அளவுநெய்
  9. ஒரு சிட்டிகைபச்சை கற்பூரம்

சமையல் குறிப்புகள்

25 minutes
  1. 1

    முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் 1 டம்ளர் பால் சேர்த்து 5 அல்லது 6 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். பிறகு குக்கரில் வேக வைத்த சாதத்தில் நெய் சிறிது விட்டு கரண்டி வைத்து சிறிதளவு மசித்து விடவும்.

  3. 3

    பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து வெல்லம் கரைத்ததை ஊற்றி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வந்ததும் பொங்கலில் சேர்த்து கிளறி விடவும்.கடைசியாக கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்து கிளறி இறக்கவும். சூடான மணக்க மணக்க நாவூறும் ஸ்வீட் பொங்கல் தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes