ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை புதினாசேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.
- 2
பின்பு அதில் ஒரு கப் ஸ்வீட் கார்ன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும். வதங்கியவுடன் அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து லேசாக வதக்கவும். பின்பு அதில் பால் ஒரு கப் மற்றும் தண்ணீர் ஒரு கப் சேர்த்து கிளறி விடவும்.நன்கு கொதித்தவுடன் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறவும்.
- 3
கொதித்தவுடன் குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வைத்து எடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் புலாவ் தயார். இதனை காளான் அல்லது பன்னீர் கிரேவியுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்