ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

பிரியாணி வகைகள்

ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)

பிரியாணி வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் 65 க்கு :
  2. 1 கிலோசிக்கன்
  3. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. 2 டேபிள் ஸ்பூன்தயிர்
  5. 1 டேபிள் ஸ்பூன்லெமன் ஜூஸ்
  6. 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. 2 டேபிள் ஸ்பூன்சோள மாவு
  8. 1 டேபிள் ஸ்பூன்மைதா மாவு
  9. 1 சிட்டிகைஃபுட் கலர்
  10. தேவைக்குஉப்பு
  11. 1முட்டை
  12. 3பச்சை மிளகாய்
  13. கொஞ்சம்கறிவேப்பிலை
  14. தேவையான அளவுஎண்ணெய் - பொரிப்பதற்கு
  15. மசாலா செய்வதற்கு
  16. 2பெரிய வெங்காயம்
  17. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  18. 2தக்காளி
  19. 3பச்சை மிளகாய்
  20. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா
  21. 1 டீஸ்பூன்பிரியாணி மசாலா
  22. 1/2 டீஸ்பூன்பெப்பர் தூள்
  23. 1 டீஸ்பூன்மல்லித்தூள்
  24. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  25. 1 டீஸ்பூன்சீரகத்தூள்
  26. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  27. 3 டேபிள் ஸ்பூன்தயிர்
  28. 1/2 டேபிள் ஸ்பூன்லெமன் ஜூஸ்
  29. கொஞ்சம்மல்லித்தழை
  30. கொஞ்சம்புதினா இலை
  31. ரைஸ் வைப்பதற்கு
  32. 4 கப்சீரக சம்பா அரிசி - (30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து எடுக்கவும்)
  33. 8 கப்தண்ணீர்
  34. 6ஏலக்காய்
  35. 6கிராம்பு
  36. 2பிரியாணி இலை
  37. 2 சிறிய துண்டுபட்டை
  38. 15 எண்ணம்நல்ல மிளகு
  39. நெய்
  40. முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் நெய்யில் பொரித்து எடுக்கவும

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் 65 செய்வதற்கு :முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், லெமன் ஜூஸ், மிளகாய் தூள்,சோள மாவு,மைதா மாவு,ஃபுட் கலர், தேவைக்கு உப்பும் சேர்த்து, முட்டையையும் அதில் உடைத்து ஊற்றி நன்றாக மிக்ஸ் பண்ணி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  3. 3

    அதே எண்ணெயில் பச்சை மிளகாயை இரண்டாக கீறிப் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலையும் போட்டு நன்றாக ஃப்ரை செய்து சிக்கனில் சேர்க்கவும். இப்போது மொறு பொறுப்பான சிக்கன் 65 ரெடி.

  4. 4

    மசாலா செய்வதற்கு : முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நைஸாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வெங்காயத்தை எண்ணெயில் ஃப்ரை செய்யவும்.வெங்காயம் ஃப்ரை ஆகி வரும் போது அதில் கொஞ்சம் வெங்காயம் மாற்றி வைக்கவும். மீதமுள்ள வெங்காயத்தில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கி வரும் போது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், பெப்பர் தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை மாறும் வரை நன்றாக வதக்கவும்.

  5. 5

    பச்சை வாசனை மாறியதும் அதில் தயிர், லெமன் ஜூஸ், மல்லித்தழை, புதினா இலை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.இதில் ஃப்ரை செய்து வைத்திருக்கும் சிக்கனிலிருந்து பாதி சேர்த்து நன்றாகக் மிக்ஸ் செய்து லோ ஃப்ளேமில் 2 நிமிடம் மூடி வைத்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது மசாலா ரெடி.

  6. 6

    ரைஸ் வைப்பதற்கு : ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.இதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, நல்ல மிளகு சேர்க்கவும்.இதில் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.இய்போது ரைஸ் ரெடி.

  7. 7

    வெந்த ரைஸில் பாதியை வேறோரு பாத்திரத்தில் மாற்றவும்.இப்போது ரைஸின்‌ மீது சிக்கன் மசாலாவை பரத்தவும். இதன் மீது ஃப்ரை செய்த வெங்காயம், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், மல்லித்தழை, புதினா இலை போட்டு பரத்தவும்.

  8. 8

    இதன் மேல் மாற்றி வைத்த ரைஸ் போட்டு பரத்தவும்.மஞ்சள் கலர் கலக்கி ஊற்றவும்.

  9. 9

    மீதி இருக்கும் பொரித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், வெங்காயம், மல்லித்தழை, புதினா இலை எல்லாம் இதன் மேல் போட்டு 2 டேபிள் ஸ்பூன் நெய்யும் சேர்த்து, மாற்றி வைத்த சிக்கன் 65 - ஐ இதன் மேல் பரத்தி மூடி வைத்து 10 நிமிடம் தம் போடவும்.

  10. 10

    அருமையான சுவையில்‌ ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

கமெண்ட்

IN DEALARZ
IN DEALARZ @cook_28727017
Who want to earn money just watch video? Here is link to sign up!!
https://GramFree.cc/?r=12362234

Similar Recipes