சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பிரியாணி மசாலாக்களை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
- 2
சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 4
பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு சூடானதும் குறைந்த தீயில் வைத்து பெரிய அரைத்த பிரியாணி மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள (புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு பச்சைமிளகாய்) விழுதை சேர்த்து கரும்பச்சை நிறம் வரும் வரை வதக்கவும், நிறம் மாறிய பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்
- 6
அதன் பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும், பச்சை வாசனை போன பிறகு தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 7
எண்ணெய் பிரிந்து வரும் பொழுது சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி 15 நிமிடம் வேக வைக்கவும் (தண்ணீர் விடத் தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும்)
- 8
(இப்போது 4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்) சிக்கனில் இருந்து வந்த தண்ணீர் ஒரு கப் அளவு இருப்பதினால் நான் இதில் 3 கப் தண்ணீர் சேர்த்து (சிக்கனில் இருக்கும் தண்ணீரை பொருத்து 3 அல்லது 3-1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்) தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 9
தண்ணீர் நன்றாக கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும் சதவீதம் வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு முறை கிளறவும்
- 10
துணியால் மூடி காற்று புகாத வரை வைக்கவும் இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்... அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறவும்
- 11
சுவையான சிக்கன் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
-
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
More Recipes
கமெண்ட் (5)