சிக்கன் 65 பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)

Saitha
Saitha @cook_23202712

சிக்கன் 65 பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் 65:-
  2. 1/4 கிலோ சிக்கன்
  3. 1/ 2 மேசைக்கரண்டிகரண்டி மிளகாய்த்தூள்
  4. 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  5. 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 2மேசைக்கரண்டி தயிர்
  8. தேவையான அளவுஉப்பு
  9. பிரியாணிக்கு:-
  10. 1 கப் அரிசி
  11. 1 தேக்கரண்டி பட்டை கிராம்பு ஏலம்
  12. 1பிரியாணி இலை
  13. 2 பெரிய வெங்காயம்
  14. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  15. 3மேசைக்கரண்டி தயிர்
  16. 2 பச்சை மிளகாய்
  17. 1 மேஜைக்கரண்டி பிரியாணி மசாலா தூள்
  18. 2 மேஜைக்கரண்டி நெய்
  19. தேவையானஅளவு உப்பு
  20. தேவையானஅளவுஎண்ணெய்
  21. தேவையானஅளவு முந்திரி உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் 65 செய்ய அந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிக்கனுடன் சேர்த்து நன்றாக தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்னர் அரிசியை தனியே ஒரு பாத்திரத்தில் முக்கால் பதத்தில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு கரம் மசாலா பொருட்கள் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் பிரியாணி மசாலா செய்வது தயிர் சேர்த்து நன்றாக கிளறி ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3-5 நிமிடங்கள் வதக்கவும்.

  5. 5

    5 நிமிடங்கள் கழித்து புதினா கொத்தமல்லி கீரை சேர்த்து பரப்பி விடவும். வேக வைத்துள்ள அரிசியை இந்த சிக்கன் கலவையில் மேல் ,பரத்தவும்.

  6. 6

    இந்த கலவையின் மீது நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து புதினா கொத்தமல்லி சேர்த்து பாத்திரத்தை நன்றாக இருக்க மூடிவைத்து 15 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும்.

  7. 7

    15 நிமிடங்கள் கடந்த பின்பு தோசை கல்லின் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து மற்றொரு 15 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.

  8. 8

    சிக்கன் 65 பிரியாணி தயார். எப்பொழுதும் செய்யும் பிரியாணிக்கு வேறுபட்டு இருப்பதால் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saitha
Saitha @cook_23202712
அன்று

Similar Recipes