ஹனி கேக் (honey cake recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பரிமாறுவது
  1. 1 முட்டை
  2. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  3. 1/2 கப் வெஜிடபிள் எண்ணெய்
  4. 1/2 கப் பால்
  5. 1டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  6. 1.5 கப் மைதா
  7. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1/2டீஸ்பூன் உப்பு
  10. 1/2 கப் தேங்காய் துருவல்
  11. 2டேபிள்ஸ்பூன் தேன்
  12. 3டேபிள்ஸ்பூன் ஜம்
  13. 2டேபிள்ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    குடுதுள்ள அனைத்து பொருட்களும் ரூம் டெம்பரேச்சேரில் இருக்க வேண்டும். முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    வெண்ணெய், எண்ணெய், பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    நன்கு களந்ததும் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கட்டி சேராமல் கலக்கவும். அதிக நேரமும் கலக்க கூடாது.

  4. 4

    கேக் பேனில் வெண்ணெய் தடவி இந்த மாவை ஊற்றி, முன்னதாகவே 180 டிகிரியில்
    10 நிமிடம் சோடாக்கப்பட்டட ஓவனில் வைத்து 180 டிகிரியில் 40 நிமிடம் வைத்து பேக் செய்யவும்..

  5. 5

    கேக் பேக் ஆனதும். கூர்மையான பொருளை கொண்டு நடுவில் விட்டு பார்க்கவும், ஒட்டாமல் வந்தால் பேக் ஆனதேன்று அர்த்தம் இல்லை என்றால் 5 நிமிடம் மறுபடியும் பேக் செய்யவும். பேக் செய்ததும் 10 நிமிடம் ஆரும் படி வைக்கவும்.

  6. 6

    கேக்கின் மேல் பகுதியை நீக்கி விடலாம்.

  7. 7

    சின்ன பேனில் 2 டேபிள்ஸ்பூன் ஜம் மற்றும் 4 டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி ஜம் கரையும் வரை சூடாகவும். தீயை அணைத்து ஆரிய பின்னர் 3 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்.

  8. 8

    கேகின் மேல் சிறிது சிறிதாக ஊற்றவும்.

  9. 9

    தேங்காய் துருவல் கேக் மீது சேர்க்கவும். 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் பரிமாறலாம். சுவையான ஹனி கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes