கோவை குடல் கறி பிரட்டல்

SumathiYoganandhan
SumathiYoganandhan @cook_19852308

குடல் கறி சூடான நீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி பின் 4 முறை சாதா நீரில் கழுவி எடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.வட சட்டில் எண்ணெய் விட்டு கடுகு அரை டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் 200 கிராம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அத்துடன் 2 தக்காளி பிழிந்து வணக்கி விடவும், இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து சேர்க்கவும்,சோம்பு பட்டை கச கசா தட்டி சேர்த்து விடவும்,தக்காளி பச்சை வாசனை போன பின் 2 ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் கரம் மசாலா பொடி,1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கிளறி விடவும்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,பின் வேக வைத்து குடல் கறி எடுத்து இத்துடன் சேர்க்கவும் நன்றாக கிளறி சிறிது வேகவைத்த குடல் நீர் சேர்த்து மூடி வைக்கவும்.4 நிமிடம் கழித்து எடுத்து சிறிது மல்லிதலை சேர்த்து சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. Mutton குடல் 1/2 கிலோ
  2. இஞ்சி பூண்டு 2 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் கல் உப்பு
  4. மல்லிதூள் 2 ஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
  6. பட்டை சோம்பு சிறிதளவு
  7. சின்ன வெங்காயம் 200 கிராம்
  8. தக்காளி2
  9. Oil தேவைக்கு ஏற்ப
  10. மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன்
  11. கறிவேப்பிலை மல்லிததழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் நீரில் 4 அல்லது 5 முறை குடல் கறி கல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்தல்

  2. 2

    வட சட்டி எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சேர்க்கவும்

  3. 3

    மல்லி தூள் கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள்,சோம்பு பட்டை கிராம்பு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும் மிளகாய் தூள் காரதிருகு ஏற்ப சேர்த்து வதக்கவும் இத்துடன் வேகவைத்த குடல் கறி சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கவும்.இதோ சூடான சுவையான கோவை குடல் கறி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

SumathiYoganandhan
SumathiYoganandhan @cook_19852308
அன்று

Similar Recipes