ராகி குலாப் ஜாமூன்  (கேழ்வரகு குலாப் ஜாமூன்)

Afra bena
Afra bena @cook_20327268
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ராகி மாவு-4ஸ்பூன்
  2. மில்க் பவுடர் -6ஸ்பூன்
  3. சோளமாவு -3ஸ்பூன்
  4. பேக்கிங் பவுடர் -1டீஸ்பூன்
  5. உப்பு -1சிட்டிகை
  6. பால்-1கப் (காய்ச்சியது)
  7. நெய்
  8. சர்க்கரை -1கப்
  9. ஏலக்காய் -4
  10. குங்குமப்பூ
  11. தண்ணீர் -2கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பவுலில் கேழ்வரகு மாவு, சோளமாவு, மில்க் பவுடர், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கலந்து கொள்ளவும். (சோளமாவு கிரிஸ்பினஸ்காக சேர்க்கப்படுகிறது)

  2. 2

    அதனுடன் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். நெய் சேர்த்து பிசைந்து 2 அல்லது 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளை சேர்த்து பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    மற்றொரு பாத்திரம் அடுப்பில் வைத்து 2கப் தண்ணீர் சேர்த்து 1கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். ஏலக்காய் தட்டி போடவும். குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    சர்க்கரை பாகு தயாரானதும் பொரித்து வைத்துள்ள ராகி உருண்டைகளை சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  6. 6

    பின் சர்க்கரை பாகில் இருந்து எடுத்து பரிமாறவும். அதிகமான நேரம் ராகி உருண்டைகளை ஊறவிடமால் எடுத்து கொள்ளவும்.ராகி உருண்டைகள் கரைந்து போய்விடும்.

  7. 7

    அதனால் தனியாக எடுத்து வைத்து பரிமாறவும். சுவையான ராகி குலாப் ஜாமூன் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes