நுங்கு பாயாசம்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#குளிர் உணவு
# book
கோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகளில் பிரத்தியேக இடம் பெற்றது நுங்கு இந்த நுங்கு வைத்து ஜில்லென்று ஒரு பாயசம் தயாரித்து சாப்பிட்டால் வெயிலின் தாக்கம் ஓடியே போய்விடும். அப்பேர்ப்பட்ட அற்புதமான ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன்.

நுங்கு பாயாசம்

#குளிர் உணவு
# book
கோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகளில் பிரத்தியேக இடம் பெற்றது நுங்கு இந்த நுங்கு வைத்து ஜில்லென்று ஒரு பாயசம் தயாரித்து சாப்பிட்டால் வெயிலின் தாக்கம் ஓடியே போய்விடும். அப்பேர்ப்பட்ட அற்புதமான ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேருக்கு
  1. 8பதமான நுங்கு
  2. தேங்காய்ப்பால் 4 டம்ளர்
  3. கண்டன்ஸ்டு மில்க் 4 ஸ்பூன்
  4. நாட்டுச்சர்க்கரை 100 கிராம்
  5. ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய பாதாம் இரண்டு ஸ்பூன்
  7. பொடித்த முந்திரி 2 ஸ்பூன
  8. உப்பு கால் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நுங்கை மேலே உள்ள தோலை உரித்து விட்டு மிக மெல்லியதாக சேமியா போன்று நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மண்பானை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி அத்துடன் இந்த நுங்கை சேர்க்கவும்.சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்கு கரைத்து கீழே இறக்கி வடிகட்டி பாத்திரத்தில் ஊற்றவும் பிறகு கண்டன்ஸ்டு மில்க் ஏலக்காய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  3. 3

    பிறகு வெளியில் எடுத்து தேவையான க்ளாசில் ஊற்றி பொடித்து வைத்த பாதாம் முந்திரி சேர்த்து மேலே தூவி பரிமாற ஜில்லென்று நுங்கு பாயாசம் தயார். இதை நொங்கு கீர் என்றும் சொல்லலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes