தேவையான பொருட்கள்

  1. 2 வெங்காயம்
  2. 2 உருளைக் கிழங்கு
  3. 250 கிராம் கோஸ்
  4. 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. எண்ணெய்
  6. உப்பு
  7. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. புதினா
  11. மல்லி இலை
  12. 1 கப் அரிசி மாவு
  13. 1 கப் சேமியா

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்வோம்.

  2. 2

    அதனுடன் கோஸ்ஸை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி, மசித்த உருளைக்கிழங்கை போட்டு, புதினா மற்றும் மல்லிஇலை தூவி ஆறவைத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்வோம்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்வோம். ஒரு தட்டில் சேமியாவை எடுத்து வைத்துக் கொள்வோம். உருண்டையை அரிசி மாவில் டிப் செய்து, சேமியாவில் உருட்டி, மிதமான சூட்டில் பொரித்து எடுத்துக் கொள்வோம்.

  4. 4

    மொறுமொறுப்பான கேபேஜ் செமோலினா பால்ஸ் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes