வெள்ளரிக்காய் லசி

கோடைக் காலத்தில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவது வெள்ளரிக்காய், பருகுவது மோர். நான் மிகவும் விரும்பும் காய்கறி வெள்ளரிக்காய். சாலட். பச்சடி , தோசை எல்லாவற்றிலும் பயன்படுத்துவேன். குறைந்த நேரதத்தில் சுலபமாக செய்யக்கூடியது வெள்ளரிக்காய் லசி. வெள்ளரிக்காய், தயிர், ஏலக்காய், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து பிளெண்டரில் மிக்ஸ் பண்ணி, கூட நீர் கலந்து தயாரித்தேன். லசியை ஒரு பானையில் ஊற்றி குளிர்பெட்டியில் குளிர செய்தேன். சிறிது உப்பு சேர்த்தேன். சுவையான குளிர்ந்த லசி எப்பொழுது வேண்டுமானாலும் பருகலாம். #மகளிர்
வெள்ளரிக்காய் லசி
கோடைக் காலத்தில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவது வெள்ளரிக்காய், பருகுவது மோர். நான் மிகவும் விரும்பும் காய்கறி வெள்ளரிக்காய். சாலட். பச்சடி , தோசை எல்லாவற்றிலும் பயன்படுத்துவேன். குறைந்த நேரதத்தில் சுலபமாக செய்யக்கூடியது வெள்ளரிக்காய் லசி. வெள்ளரிக்காய், தயிர், ஏலக்காய், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து பிளெண்டரில் மிக்ஸ் பண்ணி, கூட நீர் கலந்து தயாரித்தேன். லசியை ஒரு பானையில் ஊற்றி குளிர்பெட்டியில் குளிர செய்தேன். சிறிது உப்பு சேர்த்தேன். சுவையான குளிர்ந்த லசி எப்பொழுது வேண்டுமானாலும் பருகலாம். #மகளிர்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணுக. தேவையான பொருட்களை அருகில் வைத்து கொள்ளுங்கள்
- 2
எல்லா பொருட்களையும் பிளெண்டரில் போட்டு பிளெண்ட் 2 நிமிடம் பண்ணுங்கள். லசி தயார்.
ஒரு தம்பளரில் ஐஸ் போட்டு லசி ஊற்றி, தேவையான உப்பு கலந்தால் சுவையான குளிர்ந்த லசி உடனே தயார். - 3
மண் பானையில் லசியை ஊற்றி குளிர வைத்தால் ருசி அதிகம்.
குளிர்ப்பெட்டியில் வைத்து வேண்டும் போது பருகலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் லஸ்ஸி
நிறம், சத்து. ருசி, போட்டாசியம், விட்டமின் A, பீட்டா கேரோடின் (beta carotene rich அதனால்தான் இந்த காய்கறிக்கு கேரட் என்று பெயர் ) அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும். புற்று நோய் குறைக்கும் சக்தியும் கொண்டது, நான் கால்ஷியம் சேர்ந்த கொழுப்பு குறைந்த பாலில் தயிர் செய்வதால் இந்த லஸ்ஸி கூட கால்ஷியம் சேர்க்கும்; நன்மை கூடும் . கேரட்டை தோலுரித்து பிளேன்ஞ்ச் பண்ணி துருவினேன். துருவலோடு, இஞ்சி, பச்சை மிளகாய், மோர் சேர்த்து பிளென்டரில் லஸ்ஸி செய்தேன். கூட இலக்காய், அதிமதுரம், ஜாதிக்காய், மிளகு பொடி சேர்த்து சுவையான, சத்தான, ருசியான, லஸ்ஸி செய்தேன். #goldenapron3#nutrient1 Lakshmi Sridharan Ph D -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari -
*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)
#VKநாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
-
தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020 Lakshmi Sridharan Ph D -
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
அவரைக்காய் புலவ்
அவரைக்காயில் வைட்டமின் A, B, E, நார் சத்து, புரதம். இன்னும் பல நலம் தரும் சத்துகளும் உள்ளன. இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது.பொரியலும், பொரிச்ச கூட்டும் செய்து அலுத்து விட்டது. அதனால் இன்று அவரைக் அவரைக்காயில் புலவ் செய்தேன். வெண்ணையில் கடுகு, சீரகம் பெருங்காயம் தாளித்த பின், கிராம்பு, லவங்கப்பட்டை. ஏலக்காய் சேரத்து, இஞ்சி, பூண்டு போட்டு, வெங்காயத்தை வதக்கினேன். ஊறவைத்த அரிசியை களைந்து , வடித்து அதில் சேர்த்தேன். அரசி பாதி வெந்த பின் அவரைக்காயை சேர்த்து தண்ணீரும் தேங்காய் பாலும் சேர்த்துக்கொண்டு வேகவைத்தேன். எல்லா பொருட்களும் கலந்து வெந்த பின். அடுப்பிலிருந்து இறக்கினேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். சுவையான சத்தான ருசியான புலவ் தயார்.#book Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் ரவா ஃப்ரை
மஷ்ரூம் –காய்கறிகளில் இது ஒன்றில்தான் விட்டமின் D, செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது. மஷ்ரூம் பகோடா எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த ரெஸிபி சிறிது வித்தியாசமானது. கடலை மாவில் மூழ்க வைத்து பொரிக்கவில்லை. ரேசிபியை பாருங்கள், பக்தியோடு எந்த பண்டம் வேண்டுமானாலும் நெவேத்தியம் செய்யலாம். #pooja Lakshmi Sridharan Ph D -
கோபி பரோட்டா #the.Chennai.foodie
கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie Hema Ezhil -
வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை
சத்து சுவை மிகுந்த வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை செய்வது எளிது, காய்கறிகளை தனியாக அறைத்து தோசை மாவுடன் கலந்தேன். இஞ்சி, மிளகாய் இரண்டும் நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, தினை, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #book#https://cookpad.wasmer.app/in-ta/contests/3491 Lakshmi Sridharan Ph D -
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
பச்சை காய்கறிகள் சாலட், பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங்
சத்து, நிறம், மணம், ருசி அனைத்தும் நிறைந்த பச்சை காய்கறிகள் ப்ரொக்கோலி (broccoli), பச்சை குடை மிளகாய், பச்சை ஆப்பிள், கொத்தமல்லி, பார்ஸ்லி. நசுக்கிய இஞ்சி, பூண்டு, தேன், சோய் சாஸ் சேர்ந்த ட்ரெஸ்ஸிங். குறைந்த நெருப்பின் மீது ஒரு ஸாஸ்பேனில் சோய் சாஸ், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து சில நிமிடங்கள் சுட வைத்தேன். சூடு இஞ்சி, பூண்டு இரண்டிலிருக்கும் சுவையை (flavor) வெளியே இழுத்து சாஸ் உடன் சேர்க்கும். தேன் சேர்த்து கிளறி, கார்ன் ஸ்டார்ச் (corn starch) சேர்த்து கிளறி சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைத்தேன், பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங் தயார். அதை காய்கறிகளோடு சேர்த்து குலுக்கி, பாதாம், வால்நட் சேர்த்தேன் #gpldenapron3. #book Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
மசாலா டீ
எந்தோ ருசி!!! எந்தோ மணம்!!! மசாலா டீக்கு நிகர் மசாலா டீ தான்!!! #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa
#மகளிர்சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃 Shyamala Senthil -
கொத்து கடலை சுண்டல்
சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான குழந்தைகள் விரும்பும் ஸ்னாக். கடலையை சில மணி நீரில் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்தேன். மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சிறிது எண்ணையில் காடு, சீரகம், பெருங்காயம், உளுந்து தாளித்து, இஞ்சி, பூண்டு,மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கினேன் , வெந்த கடலை சேர்த்து கிளறி உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைத்தேன், 30 நிமிடங்களில் சுவையான சுண்டல் தயார்.# ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லில் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3, #கோதுமை Lakshmi Sridharan Ph D -
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
ஸ்பாஞ் கேக்
பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய்கொண்டு அதன் உட்பகுதியை கிரீஸ் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு மைதாவை அந்த பாத்திரத்தில் தூவிக் கொள்ளுங்கள்.மற்றொரு காலி பாத்திரத்தில் தயிர், பொடியாக்கி வைத்த சர்க்கரை , ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கிளார்க் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் சிறு சிறு முட்டைகள் தோன்றும்.இப்போது மைதா ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அந்த கலவையில் எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளறவும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மறுபடி கட்டி இல்லாமல் கிளறவும்.இந்த கலவையை நெய் கொண்டு கிரீஸ் செய்த பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தை சில நிமிடங்கள் நன்றக தட்டி, மாவு முற்றிலும் எல்லா இடங்களில் பரவும்படி செய்யவும்.இப்போது மாவின் டியூட்டி ப்ரூட்டி மேல் பகுதியில் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். குக்கர்10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர் , மாவு கிண்ணத்தை குக்கர் வைத்து 35-40 நிமிடங்கள் வேக விடவும். கேக் மிருதுவாக உப்பி வரும்.பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும். Kaarthikeyani Kanishkumar -
ப்ரொக்கோலி புலவ்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 1 (Balanced lunch 1 recipe in tamil)
காய்கறி ஊத்தப்பம், ஆப்பிள் தொக்குவளரும் சின்ன பசங்கள் உணவு ஊட்ட சத்துக்கள் கொண்டிருக்க வேண்டும்.எதிர் காலம் அவர்கள் கையில். “சுவரை வைத்து சித்திரம் எழுதவேண்டும்” உடல் தான் சுவர். கேரட், வெள்ளரி, பட்டாணி, ஆவகேடோ, தக்காளி சேர்ந்த ஊத்தப்பம், வையல் காலத்தில் தோட்டத்தில் ஏராளமான செர்ரி தக்காளிகள். அவைகளை ஃப்ரீஸ் செய்தேன். இப்பொழுது அவைகளை உபயோகப்படுத்துகிறேன்.நான் ஆப்பிள் தொக்கு செய்திருந்தேன். ஆப்பிள் எங்கள் தோட்டதில் இருக்கும் மரத்தில் நூறுக்கணக்கான பழங்கள், மாங்காயைப் போல் சிறிது புளிப்பு (tart).. மாங்காய் தொக்கு செய்வது போலவே ஆப்பிள் தொக்கு செய்தேன். ஸ்டிரைல் ஏர் டைட் (sterile air tight) ஜாரில் சேமித்து வைத்து, வேண்டும் போதெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் #kids3 #GA4 #FROZEN Lakshmi Sridharan Ph D -
நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)
#LRCஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எளிய முறையில் மீந்த இட்லி மாவுடன் காய்கறிகள் கலந்து பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்