எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 min
4 பரிமாறுவது
  1. பாசுமதி அரிசி - 500 gram
  2. இறால் -3/4 கிலோ
  3. வெங்காயம் - 2 பெரியது
  4. தக்காளி - 6
  5. இஞ்சி பூண்டு தே. அளவு
  6. புதினா கொத்தமல்லி
  7. லெமன் -1
  8. தயிர் - 3 spoon
  9. பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை
  10. உப்பு

சமையல் குறிப்புகள்

25 min
  1. 1

    பாஸ்மதி அரிசி கழுவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    சுத்தம் செய்து வைத்துள்ள இறாலில் உப்பு மஞ்சள் தூள் தனியாத்தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி புதினா இலையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    மிக்ஸியில் பூண்டு இஞ்சி கசகசா சோம்பு பச்சைமிளகாய் கிராம்பு பட்டை ஏலக்காய் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    குக்கரில் எண்ணெய் சூடான பின்பு பட்டை கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் தாளித்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். புதினா கொத்தமல்லி தக்காளி சேர்த்து வதக்கவும். லெமன் சாறு மற்றும் தயிர் சேர்த்து கிண்டவும்

  7. 7

    மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து வதக்கவும்.

  8. 8

    தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அதனுடன் கலக்கவும்.

  9. 9

    உப்பு காரம் சரிபார்த்த பின்பு குக்கரை மூடவும். 2 அல்லது 3 விசில் விட்டு இரக்கவும்.

  10. 10

    பிரியாணியை லேசாக கிளறி விட்டு கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes