உப்பு மிளகாய் பொடி சாதம் (லெப்ட் ஓவர்)

#கோல்டன் ஆப்ரன்3
மீந்த பழைய சாதத்தில் செய்வது. ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த சாதம் பிசைந்தால் வீட்டில் உனக்கு எனக்கு என்று போட்டி நடக்கும்.பழைய சாதம் வேண்டாம் என்று சொல்லும் வீட்டுவேலை செய்பவர்கள் கூட இந்த சாதத்தை விரும்பி கேட்டு சாப்பிடுவர். இது வெயில் காலம் என்பதால் மீந்த சாதத்தில் நீர் சேர்த்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை செய்வதற்கு அரை மணி நேரம் முன் எடுத்து வெளியில் வைத்துவிடவும். குளிர்காலத்தில் செய்வதென்றால் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கத் தேவையில்லை. கடலை எண்ணெய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்முறைகள் நுழைவோம்.
உப்பு மிளகாய் பொடி சாதம் (லெப்ட் ஓவர்)
#கோல்டன் ஆப்ரன்3
மீந்த பழைய சாதத்தில் செய்வது. ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த சாதம் பிசைந்தால் வீட்டில் உனக்கு எனக்கு என்று போட்டி நடக்கும்.பழைய சாதம் வேண்டாம் என்று சொல்லும் வீட்டுவேலை செய்பவர்கள் கூட இந்த சாதத்தை விரும்பி கேட்டு சாப்பிடுவர். இது வெயில் காலம் என்பதால் மீந்த சாதத்தில் நீர் சேர்த்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை செய்வதற்கு அரை மணி நேரம் முன் எடுத்து வெளியில் வைத்துவிடவும். குளிர்காலத்தில் செய்வதென்றால் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கத் தேவையில்லை. கடலை எண்ணெய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்முறைகள் நுழைவோம்.
சமையல் குறிப்புகள்
- 1
மீந்த் சாதத்தை முதல் நாள் இரவே தண்ணீர்விட்டு மூடி வைத்து விடவும்.
- 2
ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம்.அதனால் சாப்பிடுவதற்கு முன் செய்து கொள்ளவும்.இல்லையென்றால் சாதம் நீர் விட்டது போல ஆகிவிடும்.. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நீரில் ஊறி இருக்கும் சாதத்தை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் குழம்பு மிளகாய் பொடி, உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். மிகுதியான சாதத்திற்கு தகுந்தார்போல் மேற்கொண்ட பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு பிசைந்து கொள்ளவும். காரம் உப்பு எண்ணெய் சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும்.
- 3
பிசைந்த சாதத்தை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பிஞ்சு சின்ன வெங்காயத்துடன் கடித்துக் கொண்டு சாப்பிட வெகு சுவையாக இருக்கும். வயிற்றுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உப்பு மிளகாய் பொடி சாதம் (uppu milaaai podi saatham recipe in tamil)
#family#nutrient3சாதம் மீதி ஆகிவிட்டால் கவலை வேண்டாம் இந்த மாதிரி செஞ்சு குடுங்கல். எங்க வீட்ல உப்பு மிளகாய் பொடி போடணும்னு அதிகமாக சாப்பாடு செய்து மீதி ஆனதை அடுத்த நாள் யூஸ் பண்ணிபோம். Sahana D -
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi -
உப்பு மொளகாப் பொடி சாதம்
எங்கள் வீட்டில் மதியம் சாப்பாடு மிந்து விட்டால் இந்த உப்பு மொளவடி சாதம் செய்து சாப்பிடுவோம். இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக சும்மா நச்சுனு இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல் போன கூட கிடைக்காது. #leftover Sundari Mani -
தித்திக்கும் அல்வா(halwa recipe in tamil)
எப்போதும் வீட்டில் சாதம் மீந்துகொண்டே இருக்கும், அதை பழைய சாதகமாக கரைத்து விடுவேன், ஒரு நாள் என் பாட்டி இப்படி செய்து பார் என்று கூறினார், இதை இரண்டாவது முறையாக செய்கிறேன், பிள்ளைகளுக்கு ஒரே குஷி. Sweety Sharmila -
ஐஸ் பிரியாணி(Hotel style curd rice..ice biriyani recipe in tamil)
#pongal 2022பொங்கல் அன்று செய்த பொங்கு சோறு நீண்டுவிட்டது. இரவில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டேன்.மறுநாள் மதியம் சாப்பிடும் பொழுது அந்த சாதத்தை வெளியில் எடுத்து தண்ணீர் குளிர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டேன்.இது தாளிதம் செய்து தயிர்சாதம் செய்தேன் சூப்பராக இருந்தது ஹோட்டல் ஸ்டைல் தயிர் சாதம் போல் இருந்தது. அப்படி என்றால் ஹோட்டலில் தயிர் சாதத்தை இப்படித்தான் மீதமான சாப்பாட்டில் செய்வார்களோ என்னவோ. நான் விளையாட்டாக சொல்வது போல் இதற்கு நான் வைத்த பெயர் ஐஸ் பிரியாணி. வாருங்கள் ஐஸ் பிரியாணி செய்வோம். Meena Ramesh -
இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)
#leftover பழைய சாதம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் எடை இழப்புக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த அட்டா உதவுகிறது ... Madhura Sathish -
உப்பு நெல்லிக்காய்
#GA4 சுவையாக சுலபமாக செய்ய கூடிய உணவு. பால் சாதம் மற்றும் பழைய சாதம் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். Week11 Hema Rajarathinam -
பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. Sharmila Suresh -
பூண்டு மசாலா சாதம் (Garlic masala rice recipe in tamil)
மதியம் செய்த சாதம் மீதி ஆனது.அந்த சாதத்தில் சத்தான பூண்டு ,மசாலாக்கள் சேர்த்து வதக்கி சாதத்தை கலந்து சூடாக பரிமாறினேன்.சுவை அபாரமாக இருந்தது.#leaftovermarothan#npd2 Renukabala -
*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
மீந்த சாத கபாப் (leftover rice kabab)
#leftover மீதியான சாதத்தில் செய்த இந்த கபாப் மிகவும் சுவைத்தது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
குடை மிளகாய் சாதம் /Capsicum Rice
#கோல்டன் அப்ரோன்3#bookசாதத்தில் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் செய்து இருப்போம் .காய்கறிகளிலும் சாதம் செய்யலாம் .நான் இன்று குடைமிளகாயில் சாதம் செய்து இருக்கிறேன் .நீங்களும் செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
பாரம்பரிய புளி குழம்பு / traditional puli kozhambu curry Recipe in tamil
ஐந்து வகை சாதத்தில் ஒன்று புள்ளி சாதம் இந்த குழம்பை வைத்து தயாரிக்கலாம். Sasipriya ragounadin -
-
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
நீச்சத்தண்ணி/நீராகாரம்
#immunityபழைய சாதத்தில் வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.பழைய சோறில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகளவில் இருப்பதால், உடலை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற உதவி செய்கிறது.இதில் அதிகளவிலான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதுடன் இரத்த அழுத்ததையும் சமன்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
ப்ரோசன் பட்டாணி பொரியல்(frozen peas poriyal recipe in tamil)
பத்தே நிமிடத்தில் இந்த பொரியலை செய்து விடலாம் மிகவும் சுவையாக இருக்கும் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
தேங்காய் சாதம் தயிர் சாதம்
சாதம் வடிக்க.தேங்காய் துறுவி நெய்யில் வறுக்கவும். கடுகு ,உளுந்து ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை வறுத்த பின் உப்பு தேங்காய் துறுவல் ,சாதம், ஒரு கப் கலக்கவும் ,தேங்காய் சாதம் தயார். வாழைப்பூ வெட்டி மிளகாய் வற்றல், கடுகு,உளுந்து வறுத்து உப்பு போட்டு வதக்கவும். இதே போல் உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு,போட்டு மஞ்சள் தூள்,பூண்டு பல் தட்டி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும். ஒSubbulakshmi -
நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)
#LRCமுட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். மீட்க சாதத்தை இட்லி குக்கரில் பிரஷர் இல்லாமல் 5 நிமிடம் நீராவியில் சூடு செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம் Lakshmi Sridharan Ph D -
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
குளிர் நீர் மோர் சாதம்
#குளிர் உணவுகள்இப்பொழுது அடிக்கின்ற வெய்யிலில் குளிர்ச்சியான சாதம் முறைப்படி எப்படி செய்து சாப்பிடுவது என்று இந்த தலைமுறைகளுக்கு தெரியவில்லை அதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு
#combo5தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும் Mangala Meenakshi -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
* பழைய சாதம்*(palaya sadam recipe in tamil)
@Crazy Cookie,அவர்கள் செய்த, பழைய சாதம், ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.வெயிலுக்கு அருமை.நன்றி. Jegadhambal N -
More Recipes
கமெண்ட்