கோதுமை மாவில் பருப்பு போளி

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#goldenapron3 week 11

கோதுமை மாவில் பருப்பு போளி

#goldenapron3 week 11

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு - 3 கப்
  2. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  3. உப்பு - தேவைக்கு
  4. எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு
  5. கடலை பருப்பு - 2கப்
  6. தேங்காய் - 1/2 மூடி
  7. வெல்லம் - 2 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் 1ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட இலகுவாக பிசைந்து கொள்ளவும். மாவு கையில் ஒட்டும் அளவுக்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் மாவின் மேல் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக தடவி 2 மணி நேரம் வரை உர விடவும்.

  2. 2

    கடலை பருப்பை குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் பருப்பு ஆறிய உடன் மிக்சியில் கட்டி இல்லாமல் அரைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து 1/2டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லத்தை கரைத்து கொள்ளவும் (பாவு பதம் தேவை இல்லை). பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை வடி கட்டி எடுத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள கடலை பருப்பை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொண்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, துருவிய தேங்காய்,

  3. 3

    ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து பூரணம் லட்டு பிடிக்கும் பதம் வரும் வரை கிளறி கடைசியில் 1ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

  4. 4

    கையில் எண்ணயை தடவி கொண்டு சப்பாத்தி மாவை உருட்டி கையில் வைத்து கிண்ணம் போல் செய்து நடுவே பூரணம் உருண்டை வைத்து மேலே சப்பாத்தி மாவை வைத்து மூடி கொள்ளவும். பின் சப்பாத்தி கடடையில் எண்ணெய் தடவி அதன் மேல் உருண்டை வைத்து கையால் சப்பாத்தி போல் தட்டி எடுத்து தோசை கல்லில் சிறிது நெய் தடவி சுட்டு எடுக்கவும்

  5. 5

    இருபுறமும் நெய் அல்லது எண்ணெய் தடவி சுட்டு எடுத்தால் சுவையான பருப்பு போளி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes