பருப்பு போளி

Sahana D
Sahana D @cook_20361448

#அம்மா
எங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள்.

பருப்பு போளி

#அம்மா
எங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் கடலை பருப்பு
  2. 11/2கப் வெல்லம்
  3. 1/4கப் தண்ணீர்
  4. 2கப் மைதா மாவு
  5. மஞ்சள் தூள்
  6. 1/4டீஸ்பூன் உப்பு
  7. 1ஸ்பூன் நெய்
  8. 1/4கப் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை பருப்பு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் பருப்பை 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடித்து கொள்ளவும்.

  3. 3

    மைதா உப்பு மஞ்சள் தூள் நெய் சேர்த்து மாவை இலக்கமாக பிசைந்து கொள்ளவும். 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

  4. 4

    கடாயில் வடித்த வெல்லம் பாகு சேர்த்து அதில் வேக வைத்த கடலை பருப்பை மசித்து சேர்த்து கொள்ளவும்.துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கிளறவும்.

  5. 5

    ஆற வைத்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும். இலையில் எண்ணெய் தடவி மைதா மாவில் பூரணத்தை வைத்து தேய்த்து தோசைக் கல்லில் மிதமான சூட்டில் நெய் விட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

கமெண்ட் (2)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
Wow இப்பவே சாப்பிடணும் போல இருக்கு சூப்பர்

Similar Recipes