எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. உருளைக்கிழங்கு 3
  2. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி
  3. மிளகாய் தூள், மல்லி தூள்-1தேக்கரண்டி
  4. ஆம்சூர் (காய்ந்த மாங்காய் பொடி)-1தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  6. சீராகம் 1மே.க
  7. கொத்தமல்லி தழை
  8. எண்ணெய்
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் அலசி கொள்ளவும்

  2. 2

    குக்கரில் அலசிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2விசில் சத்தம் வரை வேக விடவும்

  3. 3

    உருளைக்கிழங்கு நன்றாக வெந்துள்ளது.தண்ணீரை வடித்து கொள்ளவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பின் லேசான தீயில் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் தூள், மல்லி தூள், ஆம்சூர் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து பின் வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறி 1நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்

  6. 6

    கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்

  7. 7

    சீராக உருளை வறுவல் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes