கோசா பழம் புதினா பானம்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#goldenapron3 #book #immunity
கோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 8பெரிய துண்டு கோசா பழம்
  2. அரைக் கைப்பிடி புதினா இலை
  3. ரெண்டு ஸ்பூன் தேன்
  4. ரெண்டு ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கோசா பழம் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அரை கைப்பிடி புதினா வை கழுவி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் கோசர்கள் துண்டுகளையும் புதினா தலையும் மற்றும் தேன் சர்க்கரை சேர்க்கவும். கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும் மிக்ஸியை ஓட விடவும். ஐந்து நிமிடம் ஓடவிட்டு வடித்துக் கொள்ளவும்.

  3. 3

    கண்ணாடி கிளாசில் ஊற்றி ஒரு புதினா இலையை வைத்து அலங்கரித்து பரிமாறவும். சுவையான சத்தான, ஆரோக்கியம் தரக்கூடிய, எதிர்ப்பு சக்தி மிகுந்த கோசா பழம் புதினா ஜூஸ் ரெடி. கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes