தேவையான பொருட்கள்

  1. மூன்று கப் குதிரைவாலி அரிசி
  2. இரண்டு வெங்காயம்
  3. மூன்று தக்காளி
  4. இரண்டு ஸ்பூன் பூண்டு
  5. பத்து பச்சை மிளகாய்
  6. புதினா இலைகள் சிறிது
  7. மல்லித்தழை சிறிது
  8. சீரகம் ஒரு ஸ்பூன்
  9. கடுகு தாளிக்க
  10. இரண்டு ஸ்பூன் இஞ்சி
  11. கறிவேப்பிலை தாளிக்க
  12. உப்பு தேவைக்கு
  13. தண்ணீர்
  14. எண்ணை நான்கு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவை.பின் வெங்காயத்தை சிறிதாக நறுக்கு.இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை.தக்காளி பச்சை மிளகாய் ஒன்றாக அரை.புதினா மல்லித்தழை கழுவி வை.பின் ஓரு குக்கரில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளி.பின் வெங்காயம் வதக்கு.வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கு...பின் அதில் அரைத்த தக்காளி பச்சை மிளகாய் பேஸ்ட்சேர்த்து வதக்கு.

  2. 2

    பின் எண்ணை பிரிந்ததும் உப்பு புதினா சேர்.ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து ொதிக்கவை.

  3. 3

    பின் அதில் கழுவிய குதிரைவாலி அரிசியை சேர்.

  4. 4

    பின் குக்கரை மூடி மூன்று விசில் வை.பின் இறக்கி மல்லித்தழை தூவி சூடாக பரிமாறு..மிக நார்சத்தான செரிமானம் கூட்டும் இதயதத்திற்கு பலன் அளிக்கும்..பி காம்ப்ளக்ஸ் உள்ள ோய் எதிர்ப்பு சக்தி உள்ள சதை குறைக்கும் குதிரைவாலி அரிசி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
அன்று
Chennai

Similar Recipes