முருங்கை கீரை போண்டா

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#immunity #book
முருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. உளுந்து -1 கப்
  2. முருங்கை கீரை -1 கப்
  3. வெங்காயம் -1/2கப்
  4. பச்சை மிளகாய் -2 நறுக்கியது
  5. இஞ்சி (துருவியது)-1 டீ ஸ்பூன்
  6. முழு மிளகு -15
  7. அரிசி மாவு -2டே.ஸ்பூன்
  8. காய தூள் -1/4 டீ ஸ்பூன்
  9. உப்பு -தேவைக்கேற்ப
  10. எண்ணெய் -பொரிக்க
  11. கறிவேப்பிலை-12 இலை (நறுக்கியது)
  12. நெய் -2டீ ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கி வைக்கவும்.

  3. 3

    அரைத்து வைத்த உளுந்துடன் உப்பு,அரிசி மாவு, வதக்கிய கீரை சேர்க்கவும்.

  4. 4

    கூடவே துருவிய இஞ்சி,கருவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  5. 5

    அத்துடன் வெங்காயம்,மிளகு,காய தூள் சேர்க்கவும்.

  6. 6

    எல்லாத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.

  7. 7

    கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.எண்ணெய் சூடு ஆனதும் குட்டி குட்டி போண்டாவாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  8. 8

    சுவையான ஆரோக்கியமான போண்டா ரெடி.நல்ல புதினா சட்னி சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes