தேவையான பொருட்கள்

4பேர்
  1. 1/2 கிலோ -கேரட்
  2. ஒரு லிட்டர்- பால்
  3. 1/4 கப் -நெய்
  4. 20 -முந்திரி
  5. 20- திராட்சை
  6. 1/2டீஸ்பூன்- ஏலக்காய்த்தூள்
  7. ஒரு கப் -சர்க்கரை
  8. ஆரஞ்சு ஃபுட் கலர் விருப்பப்பட்டால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேரட்டை நன்றாக கழுவி தோல் சீவி நன்றாக துருவிக் கொள்ளவும்.வாணலியில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நகரில் இன்னும் சிறிது நெய் சேர்த்து துருவிய கேரட்டை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக சுருள வதக்கவும்.

  2. 2

    கேரட் வதங்கியபின் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பால் நன்றாக வற்றி சுருண்டு வரும் பொழுது இன்னும் சிறிது நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

  3. 3

    அல்வா கெட்டியானவுடன் சர்க்கரை சேர்த்து விருப்பப்பட்டால் ஆரஞ்ச் கலர் சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்து பின் அல்வா நன்றாக இறுகிய உடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து மீண்டும் ஒருமுறை சுருள கிளறி இறக்கவும்.

  4. 4

    சுவையான கேரட் அல்வா தயார் 👌😋.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes