பாதாம் பால்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#immunity
இப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
8 நபர்கள்
  1. பாதாம்பருப்பு -1 கப்
  2. கேரட்- 1
  3. பால் - 1/2 லிட்டர்
  4. தண்ணீர் - 2 கப்
  5. ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
  6. பிஸ்தா பாதாம் முந்திரி - தலா 5
  7. நெய் - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் பாதாமை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைத்து பிறகு விரல்களால் பிதுக்கி தோலை நீக்கி பருப்பு தனியா எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கேரட்டை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் நைஸாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    தோலுரித்த பாதாம் பருப்புகளை மிக்ஸியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    அரை லிட்டர் பாலுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு அடுப்பில் பாலை வைத்து நன்கு காய்ந்ததும் ஜீனி யை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்

  5. 5

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு கேரட் விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து பாதாம் விழுதை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    இதனுடன் சூடான பாலை சேர்க்கவும். நன்கு கலந்து மீண்டும் காய்ச்சி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்

  7. 7

    இப்போது பாலில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்

  8. 8

    பிறகு பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி யை மேலே தூவி இறக்கவும்

  9. 9

    சூடான சத்தான பாதாம் பால். அருமையாக இருக்கும். வேண்டுமென்றால் ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் சில்லென பருகலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes