தேவையான பொருட்கள்

  1. 1கப் துருவிய கேரட்
  2. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  3. 1 பச்சை மிளகாய்
  4. 1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  5. 1தேக்கரண்டி எண்ணெய்
  6. 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  7. 1 தேக்கரண்டி கடுகு
  8. 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி
  10. 2 கப் தோசை மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும் பின் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.

  2. 2

    பின் கறிவேப்பிலை துருவிய இஞ்சி வெங்காயம் போட்டு வதக்கவும்.
    வெங்காயம் வதங்கியவுடன் துருவிய கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    கேரட் நன்கு வதங்கியவுடன் அடுப்பை அணைத்து வதக்கிய பொருட்களை தோசை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    பணியாரக் கல்லை சூடுபடுத்தி சிறிதளவு எண்ணெயை ஊற்றவும். சிறிதளவு மாவு எடுத்து அனைத்து துறைகளிலும் சம அளவு ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
    ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு இரண்டு புறமும் நன்கு வேகும் படி மிதமான தீயில் வேகவிடவும்.

  5. 5

    தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறவும் சுவையான மற்றும் சத்தான கேரட் பணியாரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

B. Muneeswari
B. Muneeswari @cook_22545590
அன்று

Similar Recipes