எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கோதுமை மாவு
  2. தேவைக்கு உப்பு
  3. சிறிதளவுதண்ணீர்
  4. 1டீஸ்பூன் எண்ணெய்
  5. 2 முட்டை
  6. 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  7. 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  8. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
  10. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 1/4டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  13. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  14. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவை ஒரு பவுளில் போட்டு தேவைக்கு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிது தண்ணீர் சேர்த்து பூரி மாவு பருவத்தில் குழைத்து கொள்ளவும்.

  2. 2

    முட்டையை அவித்து தோடு நீக்கி விட்டு கிரேற்றரில் வைத்து துருவிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பேன் அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பச்சை மணம் மாறியதும் துருவி வைத்திருக்கும் முட்டையை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

  6. 6

    குழைத்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு உருளை எடுத்து பூரி போல பரத்தி அதன் நடுவில் கொஞ்சம் ஃபில்லிங் வைத்து பூரியை மேலிருந்து கீழாக மடக்கி இரு ஓரங்களையும் ஒட்டி விட்டு ஒரு முள் கரண்டி வைத்து அதன் விளிம்பில் வைத்து அழுத்திக் கொடுக்கவும்.

  7. 7

    இது போல எல்லா பூரிகளையும் பரத்தி ஃபில்லிங் வைத்து மடக்கி எடுக்கவும்.

  8. 8

    கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes