பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3/4கிலோ மைதா (அல்லது)ரவை
  2. 200கிராம் பச்சரிசி
  3. 300கிராம் நெய்
  4. 1/2தேக்கரண்டி உப்பு
  5. தேவைக்கேற்பசுடுவதற்கு டால்டா

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவுக்குள் வைப்பதற்கு :: பச்சரிசியை ஊறவைத்து இடித்து அல்லது அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அதில் 200கிராம் நெய் விட்டு நன்றாக நுரைப்பொங்கும் அளவிற்கு கரைத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பின் மைதா மாவில் 100கிராம் நெய் சேர்த்து உப்பு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து 10நிமிடம் வைக்க வேண்டும்.

  4. 4

    பின் அவற்றை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அரிசி மாவில் புரட்டி, பெரிய பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு பூரியை எடுத்து அதன் மேல் கலந்து வைத்திருந்த அரிசி மாவுக் கலவையை வைத்து சுருட்ட வேண்டும்.

  6. 6

    இதேபோல் 3 பூரிகளை அடுக்கி இறுக்கமாக சுருட்டி,6அல்லது8 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  7. 7

    அவை ஒவ்வொன்றையும் காயவைத்து ஒவ்வொரு பேணியானாக போட்டு எடுக்க வேண்டும்.

  8. 8

    அதன் மேல் சீனியை தூவி விட்டு பரிமாறவும். அல்லது சீனிப் பாகளில் அமிழ்த்து எடுத்து கொள்ளவும்.சுவையான பதிர்பேணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes