மலபார் பரோட்டா (Malabaar parotta recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

மலபார் பரோட்டா (Malabaar parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2+30 minutes
7 பரிமாறுவது
  1. 3 கப் மைதா
  2. ரெண்டு டேபிள்ஸ்பூன் ரவை
  3. ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  5. ஒரு ஸ்பூன் உப்பு
  6. மாவுக்கு செய்வதற்கு தேவையான
  7. மாவு பிசையவும் சுடுவதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2+30 minutes
  1. 1

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 3 கப் மைதா, 2 டேபிள்ஸ்பூன் ரவை, ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, 2 டேபிள்ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் உப்பு சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். நெய் நன்கு கலக்கும் அளவிற்கு கலந்து கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை நன்கு இளக்காமாக பிசைந்து கொள்ளவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் எடுத்து பிசைந்த மாவின் மேல் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு மணி நேரம் கழித்து தடவிய எண்ணெயை மாவு இழுத்துக் கொள்ளும் அளவிற்கு குத்தி, குத்தி அழுத்தி மீண்டும் பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடம் வரை இப்படி பிசைந்தால் மாவில் உள்ள எண்ணெய் நன்கு இழுத்துக் கொள்ளும். பிறகு உருண்டைகளாக உருட்டி மீண்டும் அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவை மூடி வைத்து ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு மணி நேரம் கழித்து உருண்டைகளை ஒன்று ஒன்றாக எடுத்து, நன்கு மிகவும் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும். ஒரு கத்திக்கொண்டு நீளவாக்கில் படத்தில் காட்டியுள்ளபடி கீறிக் கொள்ளவும். ஓரத்திலிருந்து மாவை கடைசிவரை உருட்டிக் கொண்டு வரவும். நன்கு உருட்டிய மாவை இரு ஓரங்களிலும் நீளமாக இழுத்து சுருட்டி கொள்ளவும்.

  4. 4

    படத்தில் காட்டியுள்ளபடி. எல்லா உருண்டைகளையும் இதே போல் செய்து கொள்ளவும்.

  5. 5

    சுருட்டிய பரோட்டா மாவை கையில் எண்ணெய் தடவிக் கொண்டு உள்ளங்கையால் மெதுவாக தட்டி விடவும். பிறகு பூரி நகர்த்தும் கட்டை கொண்டு மிகவும் நிதானமாக கொஞ்சம் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் தேய்த்த பரோட்டாவை இருபுறமும் சிறிது சூடான பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இருபுறமும் சிவக்க எடுக்கவும்.

  6. 6

    இதே முறையில் எல்லா பரோட்டக்களையும் சூட்டு எடுக்கவும். தொட்டுக்கொள்ள காய்குருமா,ரைத்தா போன்றவை சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes