ஸ்ட்ராபெர்ரி ஹனீ கேக் (Strawberry honey cake recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

ஸ்ட்ராபெர்ரி ஹனீ கேக் (Strawberry honey cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் மைதா
  2. 2முட்டை
  3. 3/4கப் பொடித்த சர்க்கரை
  4. சிட்டிகை உப்பு
  5. 1/4டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 50கிராம் வெண்ணெய்
  7. 1கப் பால்
  8. சிறிதளவுசமையல் எண்ணெய்
  9. ப்ரூட் ஜாம்(ஸ்ட்ராபெர்ரி)
  10. 3ஸ்பூன் தேன்
  11. சிறிதளவுதேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து நன்றாக நுரைப்பொங்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் பீட்டரில் அடித்து கொள்ளவும்.

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    பின் மைதா மாவு, உப்பு,பேக்கிங் பவுடர், இவற்றை சலித்து சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    அவற்றில் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து கலந்து விட்டு அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்கவும்.

  5. 5

    கேக் மோல்டில் வெண்ணெய் சிறிது தடவி கேக் கலவையை அதில் ஊ ற்றவும்.

  6. 6

    அவற்றை ஓவனில் 280°செல்சியஸ் 10நிமிடம் முன் சூடுபடுத்தி பின் ஓவனில் வைத்து 35-40நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.ஆறவிடவும்.

  7. 7

    ஒரு வாணலியில் 2ஸ்பூன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து 1ஸ்பூன் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கேக்கின் மேல் சிறுசிறு துளைகள் இட்டு தடவி விடவும்.

  8. 8

    பின் ஜாமை வாணலியில் போட்டு தேன் விட்டு கலந்து எடுத்து கேக்கின் மேல் தடவி விடவும். அதன் மேல் உலர்ந்த தேங்காய் துருவலை தூவி ஃப்ரிஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

  9. 9

    குறிப்பு: தேங்காய் துருவல் ஃப்ரெஷாக இருந்தால் வெறும் வாணலியில் சேர்த்து கலர் மாறாமல் வறுத்து எடுத்து உபயோகிக்கவும்.கேக் குக்கரில் செய்வதாக இருந்தால் குக்கரில் உப்பு சேர்த்து முன்சூடுபடுத்தி 30-35 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes