சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு டம்ளர் இட்லி அரிசியை கழுவி இரண்டு மணி நேரம்ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் துவரம்பருப்பை கழுவி 8வரமிளகாய் உடன்தனியாக ஊற வைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயத்தை மெலிதாக அறிந்து கொள்ளவும் ஒரு ஸ்பூன் சோம்பு எடுத்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
- 2
இனி துவரம்பருப்பை மிளகாயுடன் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் ஊறிய அரிசியை ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த மாவுடன் துருவிய தேங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், தூள் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சோடா உப்பு கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
இப்போது ஒரு கனமான தோசைக் கல் அல்லது தவாவில் சூட ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அடை மாவை உருட்டி அதில் வைத்து மொத்தமாக தட்டி விடவும். மிதமான தீயில் மூடிவைத்து பத்து அல்லது 15 நிமிடம் வரை வேக விடவும். பிரஷர் பேனில் கூட கொஞ்சம் பெரிய அளவில் ஒரே அடையாக தட்டலாம்.(ஆனால் எல்லா அடைகளும் சுட்டு எடுக்க நீண்ட நேரமாகும்.)
- 5
தங்களுக்கு விருப்பம் என்றால் திருப்பிப்போட்டு மறுபுறமும் வேக வைத்துக் கொள்ளலாம். அடையை கருக விடாமல் வேக வைத்துக் கொள்ளவும். இந்த அடை சூடாக சாப்பிட சுவையாகவும் மனமாகவும் இருக்கும். தயிர்,வெண்ணை அல்லது பொடித்த வெல்லம் மற்றும் சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்.
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
-
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
-
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
கிழங்கு வடை in two shapes(kilangu vadai recipe in tamil)
#cf6என்னுடைய முயற்சி இந்த கிழங்கு வடை..என் மாமியார் செய்வதையும் u tube வீடியோவில் சிலது பார்த்தும்,என்னுடைய ஐடியா படியும் சில மாற்றங்கள் செய்து செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. எண்ணெய் அதிகம் இழுக்கவில்லை.அதே சமயம் மிகவும் சுவையாக இருந்தது.நிறைய உணவு வகைகளை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே இருந்தாலும்,இந்த குக் பாட் தமிழ் லிங்கில் சேர்த்த பிறகு தான் அதை செயலாக்க முடிந்தது.அதுவும் இல்லாமல் இந்த குக் பாடில் சேர்வதற்கு முன்பே வகை வகையாக செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக்கில் போட்டோஸ் போடுவேன். எங்கு சென்றாலும் சில பேர் அருமையாக சமைகிறீர் கள் என்று சொல்வார்கள்.ஆனால் குக் பேடில் சேர்ந்து 450 recipies போட்ட பிறகு விசிறிகள் அதிகம் ஆகி விட்டனர். எங்கு சென்றாலும் என்னை பார்த்தால் குக் பேடில் சேர்ந்து இன்னும் அசத்துகிரீர்களே என்று தானாக வந்து பேசி பாராட்டுகிறார்கள்.மிகவும் பெருமையாக மற்றும் சந்தோசமாகவும் உள்ளது.thank you cook pad,Mahi paru and Cook pad team.Also thanks to all my cook pad friends for their encouragement,and appreciation.🙏🙏👍👍😊😊🤝 Meena Ramesh -
புரதச்சத்து மிகுந்த அடை
#combo4 #comboஅடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது Sai's அறிவோம் வாருங்கள் -
கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)
#arusuvai2இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
-
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
-
அசத்தலான முருங்கைக்கீரை அடை தோசை
#colours2 - green... 3 விதமான பருப்பு மற்றும்.அரிசி சேர்த்து செய்யும் அடை தோசையுடன் முருங்கை கீரை கலந்து செய்யும்போது இரும்பு, புரதம் நிறைந்த ஹெல்த்தியான தோசை,.. Nalini Shankar -
அடை தோசை மாவில் கார போண்டா(kara bonda recipe in tamil)
#winterகார தோசைக்கு ஆட்டும் மாவில் தனியாக உளுந்து ஊற வைத்து மாவாக ஆட்டி எடுத்து கலந்து இந்த வகை கச்சாயம் அல்லது பொண்டாவை சுடலாம். மழை காலத்திற்கும், குளிர்காலத்திற்கு சுடசுட மாலையில் சாப்பிட ஏற்ற snacks ஆகும்.நீங்கள் கார தோசைக்கு ஆட்டும் நாளன்று சிறிது உளுந்து ஊற வைத்து தனியாக ஆட்டி இதுபோல் போண்டா செய்யலாம். இதற்கென்று ஆட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.கார தோசை மாவில் கொஞ்சம் எடுத்து போண்டா செய்து விட்டு மீதி மாவை அடுத்த நாள் தோசையாக ஊற்றி கொள்ளலாம்.நான் இன்று நான்கு டம்ளர் அரிசி பிளஸ் ஒரு டம்ளர் பச்சை அரிசி அதற்கேற்ற துவரம்பருப்பு சேர்த்து ஆட்டி செய்தேன் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தோசையை ஊற்ற எடுத்து வைத்துக் கொண்டேன் Meena Ramesh -
-
-
ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.#ChefDeena Manjula Sivakumar -
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
-
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)