அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)

#kids3
அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன்.
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3
அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு டம்ளர் இட்லி அரிசி மற்றும் ஒரு டம்ளர் துவரம்பருப்பை கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பிறகு 10 வரமிளகாய் அதனுடன் சேர்த்து ஒரு மூடி தேங்காய்த் துருவல் (கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு) சேர்த்துக் கொள்ளவும். உப்பு, சீரகம் அல்லது சோம்பு ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 2
இட்லி அண்டாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு கப்பை வைத்து அந்த கப் ஆடாமல் இருக்க அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வைக்கவும். ஒரு தட்டில் எல்லா புறமும் எண்ணெயை நன்கு தடவி அடைமாவை சேர்த்து பரவலாக தட்டி விடவும்.பிறகு இட்லி அண்டாவில் உள்ள கப்பின் மேல் இந்த தட்டை வைத்து மூடி இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடம் வரை வேக விடவும்.
- 3
அடை வெந்தவுடன் தட்டை வெளியில் எடுத்து கத்தி கொண்டு துண்டுகளாக போட்டு கொள்ளவும். ஆறிய பிறகு துண்டுகளை தனித்தனியாக பிரித்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயத்தூள், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கிள்ளிய வரமிளகாய், மற்றும் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் அடைத் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். தேங்காய் துருவல் கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு சூடு ஏறும் வரை கிளறி விட்டு இறக்கவும்.
- 5
சுவையான அதை டோக்ளா குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் ரெடி. தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது சர்க்கரை நன்றாக இருக்கும். சர்க்கரை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் என்றால் மேலே தூவி விட்டு தரவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
அடை தோசை மாவில் கார போண்டா(kara bonda recipe in tamil)
#winterகார தோசைக்கு ஆட்டும் மாவில் தனியாக உளுந்து ஊற வைத்து மாவாக ஆட்டி எடுத்து கலந்து இந்த வகை கச்சாயம் அல்லது பொண்டாவை சுடலாம். மழை காலத்திற்கும், குளிர்காலத்திற்கு சுடசுட மாலையில் சாப்பிட ஏற்ற snacks ஆகும்.நீங்கள் கார தோசைக்கு ஆட்டும் நாளன்று சிறிது உளுந்து ஊற வைத்து தனியாக ஆட்டி இதுபோல் போண்டா செய்யலாம். இதற்கென்று ஆட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.கார தோசை மாவில் கொஞ்சம் எடுத்து போண்டா செய்து விட்டு மீதி மாவை அடுத்த நாள் தோசையாக ஊற்றி கொள்ளலாம்.நான் இன்று நான்கு டம்ளர் அரிசி பிளஸ் ஒரு டம்ளர் பச்சை அரிசி அதற்கேற்ற துவரம்பருப்பு சேர்த்து ஆட்டி செய்தேன் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தோசையை ஊற்ற எடுத்து வைத்துக் கொண்டேன் Meena Ramesh -
ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.#ChefDeena Manjula Sivakumar -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)
எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து தக்காளி இஞ்சி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து அடை தோசை மாவு. Meena Ramesh -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)
#arusuvai2இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
காலிஃப்ளவர் தவல அடை (Cauliflower thavala adai recipe in tamil)
இது என் ரெஸிபி; பாரம்பரிய ரெஸிபி இல்லை. அம்மா தவல அடை தவலையில் செய்வார்கள், என்னிடம் தவலை இல்லை. Cast iron skillet தான் இருக்கிறது. அடையில் காலிஃப்ளவர் சேர்த்தேன். #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
தவல அடை (thavala adai recipe in tamil)
#ricஇது என் ரெஸிபி; பாரம்பரிய ரெஸிபி இல்லை. அம்மா தவல அடை தவலையில் செய்வார்கள், என்னிடம் தவலை இல்லை. இரும்பு ஸ்கிலெட் தான் இருக்கிறது. சுவை சத்து அதிகரிக்க அடையில் காலிஃப்ளவர் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh -
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
-
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
கமெண்ட்