பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai6 சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் துவரம்பருப்பு
  2. 1 கப் பச்சை சுண்டக்காய்
  3. 6 பல் பூண்டு
  4. 1 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 1டீஸ்பூன் எண்ணெய்
  9. 1/2 டீஸ்பூன் கடுகு
  10. 1காய்ந்த மிளகாய்
  11. 1கருவேப்பிலை
  12. 1/2 எலுமிச்சை அளவு புளி
  13. 1/2 டீஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பை சிறிது பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு வேக வைக்கவும்.

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பூண்டு சேர்த்து தாளித்து, அதில் நசுக்கிய சுண்டைக்காய் சேர்த்து வெள்ளை நிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும்.

  3. 3

    சுண்டைக்காய் வதங்கிய உடன் தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

  4. 4

    காய் வெந்தவுடன் வேகவைத்த பருப்பு மற்றும் புளிக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    கண்டிப்பாக வெல்லம் சேர்க்க வேண்டும். தேவையெனில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes