கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)

ஜெயக்குமார்
ஜெயக்குமார் @cook_24286848

இது எனது முதல் பதிவு
எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன்

இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு
#முதல்பதிவு  #myfirstrecipe

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
5 பரிமாறுவது
  1. கால் கிலோகேழ்வரகு மாவு
  2. 150 கிராம்கருப்பட்டி
  3. 50கிராம்எள்
  4. 100 கிராம்நிலக்கடலை வறுத்த பருப்பு
  5. ஒரு ஸ்பூன்ஏலம்
  6. ஒரு ஸ்பூன் சுக்கு தூள்
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    கேழ்வரகு மாவை உப்பு தண்ணீர் விட்டு புட்டு போல் பிசைந்து கொள்ளவும் அதை இட்லி சட்டியில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    எந்த புட்டை நன்கு ஆறவிடவும் ஆறியதும் கருப்பட்டியை அதனுடன் போட்டு இடிக்கவேண்டும் அதில் எள்ளு இடகலை பருப்பையும் சேர்த்து உரலில் போட்டு எடுக்க வேண்டும் இடித்து இடித்து அதில் ஏலம் சுக்கு சேர்த்து உருண்டையாக பிடித்து சாப்பிட வேண்டும்

  3. 3

    இந்தக் காலத்தில் இடிக்கும் உரல் எல்லார் வீட்டில் இருக்காது அதனால் மிக்ஸியில் பெரிய ஜாரில் இரண்டு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளலாம் நல்ல சுவையாக இருக்கும் சத்தானது கூட

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஜெயக்குமார்
அன்று

Similar Recipes