கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)

#TheChefStory #ATW2 இதில் கருப்பட்டி, சுக்கு சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது
கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)
#TheChefStory #ATW2 இதில் கருப்பட்டி, சுக்கு சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பச்சரிசி மாவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்..
- 2
அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு கொதிக்கும் எண்ணெயை மாவில் கலந்து விடவும்.. அதன் பின் தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு சப்பாத்தி மாவை விட சிறிது இளக்கமாக பிசைய வேண்டும்..
- 3
நான் முறுக்கு பிழியும் அச்சில் பெரிய ஓட்டை உள்ளதை எடுத்து உள்ளேன் அதில் இந்த மாவை நிரப்பி சூடான எண்ணெயில் நீள நீளமாக பிழிந்து பொரித்து எடுக்கவும்.. மனகோலம் குண்டு குண்டாக இருக்கும் அதனால் பெரிய ஓட்டை உள்ளதை எடுத்துக் கொள்ளவும்...
- 4
மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் நிறம் மாறாமல் இருக்கும் நன்றாக ஆறிய பிறகு உடைத்துப் பார்த்தால் நடுவில் ஒரு சிறிய ஓட்டை இருக்கும் இதுதான் சரியான பதம்..
- 5
ஒரு கடாயில் கருப்பட்டியை சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்..
- 6
ஒரு சிறிய தட்டில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பாகை சிறிது எடுத்து ஊற்றினால் கையால் எடுக்க வரும் எடுத்து உருட்டினால் பாகு மிகவும் மிருதுவாக இருக்கும்... இதுதான் தக்காளி பதம்..
- 7
சுக்குப்பொடி இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஒரு மிக்ஸி ஜாரில் சுக்கை சேர்த்து நன்றாகப் பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம்
- 8
இப்போது ரெடியான பாகில் நாம் செய்து வைத்துள்ள முறுக்குகளை அதில் சேர்க்கவும்... முறுக்கு நன்றாக ஆறிய பிறகு தான் பாகில் சேர்க்க வேண்டும்... முறுக்கு ஆறியபிறகு பாகை தயார் செய்யவும்... அதனுடன் சுக்குப்பொடி ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்..
- 9
சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்து கிளறினால் பாகு இறுகி எல்லா முறுக்குடனும் சேர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக வந்துவிடும்.. அதன் பிறகு ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும்..
- 10
இப்போது நம் சுவையான பாரம்பரியமான கருப்பட்டி மனோகரம் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
-
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
-
கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)
#HJகருப்பட்டி மட்டும் சேர்த்ததால் நல்ல ஆரோக்கியம்.தேங்காய்பால் உடம்புக்கு நல்லது. SugunaRavi Ravi -
-
-
-
அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
-
-
-
-
பாரம்பரிய கருப்பட்டி தேநீர் (Karuppatti theneer recipe in tamil)
#GA4 #week8 #milkபாரம்பரிய கருப்பட்டி தேநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
More Recipes
கமெண்ட் (10)