🏨 மினி இட்லி

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#hotel
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சாம்பார் ஏற்கனவே பதிவு ஏற்றி இருக்கிறேன். சாம்பார் ரெசிபிக்கு அதைப் பார்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. ஒரு கப் இட்லி மாவு
  2. மினி இட்லி தட்டு
  3. இரண்டு கப் சாம்பார்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  6. நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் இட்லி மாவு எடுத்து கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு பொடியாக அரிந்து கொள்ளவும். நெய் கால் கப் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மினி இட்லி தட்டு எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஒரு சொட்டு எண்ணெயை தடவிக் கொள்ளவும். இட்லி மாவு ஒரு கப் எடுத்துக் கொண்டு சிறிய ஸ்பூன் ஒன்றை அதில் வைத்துக் கொள்ளவும்.இட்லி பானை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க விடவும்.

  3. 3

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில், ஸ்பூன் கொண்டு நிதானமாக இட்லி குளியில் மாவை ஊற்றவும். இட்லி பானையில் தண்ணீர் கொதித்த பிறகு இட்லி தட்டை அதில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விடவும். வெந்தவுடன் தட்டை வெளியே எடுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிடவும். வேறு ஒரு ஸ்பூன் கொண்டு நிதானமாக இட்லியை எடுக்கவும்.

  4. 4

    தேவையான அளவு இட்லியை ஒரு கப்பில் வைத்து அதன் மேல் ஏற்கனவே தயார் செய்து வைத்த ஹோட்டல் டைப் சாம்பாரை பரவலாக ஊற்றவும். அறிந்து வைத்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை தூவி கொள்ளவும். இது மினி சாம்பார் இட்லிக்கு ஹோட்டல் சுவை தரும். தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். சுவையான ஹோட்டல் டைப் மினி சாம்பார் இட்லி தயார். பெரியவர் முதல் குழந்தைகள் வரை வீட்டிலேயே விரும்பி சாப்பிடுவார்கள்.

  5. 5

    நீங்களும் வீட்டிலேயே இதை செய்து அனைவரையும் அசத்துங்கள். மினி இட்லி தட்டு இல்லாதவர்கள் சாதாரண இட்லி கூட ஹோட்டல் சாம்பார் செய்து வெங்காயம் கொத்தமல்லித்தழை தூவி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes