எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5௦ நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன்
  2. 1 கப் குடைமிளகாய் (சதுரமாக நறுக்கியது)
  3. 1 கப் வெங்காயம் (சதுரமாக நறுக்கியது)
  4. உப்பு (தேவைகேற்ப)
  5. 1 டீஸ்பூன் வத்தல் பொடி
  6. 1 டீஸ்பூன் மிளகு பொடி
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1/2 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  9. 1 டீஸ்பூன் தயிர்
  10. 1/2 டீஸ்பூன் வினிகர் (அல்லது)எலுமிச்சை சாரு
  11. 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
  12. 2 டீஸ்பூன் சோள மாவு
  13. ஸ்கீ வுட்ஸ்

சமையல் குறிப்புகள்

5௦ நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை கழுவி துண்டுகளாக நறுக்கவும்,குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் எடுத்து வைக்கவும்

  2. 2

    ஒரு மிக்சிங் பௌலில் சிக்கனை சேர்க்கவும்,பின்பு அதனுடன் உப்பு,மிளகு தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்க்கவும்

  3. 3

    பின்பு இஞ்சி பூண்டு விழுது,தயிர்,வினிகர்,சோயா சாஸ்,சோள மாவு சேர்த்து மிக்ஸ் பண்ணி 2 ௦ நிமிடம் ஊற வைக்கவும்

  4. 4

    பின்பு அதில் வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்

  5. 5

    ஸ்கீ வுட்ஸ் எடுத்து தண்ணீரில் நனைத்து சிக்கன்,குடைமிளகாய்,வெங்காயம் என மாற்றி மாற்றி குத்தி எடுத்து ஓவன் தட்டில் வைக்கவும்

  6. 6

    120 டிகிரியில் 3 ௦ நிமிடங்கள் கிரில் செய்து எடுத்தால் சிக்கன் டிக்கா ரெடி,விருப்பபட்டால் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607
அன்று

Similar Recipes