எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. சீரக சம்பா அரிசி ஒரு ஆழாக்கு
  2. பெரிய வெங்காயம் 2
  3. பச்சை பட்டாணி ஒரு கப்
  4. கேரட் ஒன்று
  5. பீட்ரூட் சிறியது 1
  6. பீன்ஸ் 10 ப்ரட் ஸ்லைஸ் 3
  7. உருளைக் கிழங்கு சிறியது 1
  8. பட்டை ஒரு துண்டு ஏலக்காய் ஒன்று கிராம்பு-2 அன்னாசிப்பூ ஒன்று பிரிஞ்சி ஒன்று
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் ஒரு பச்சை மிளகாய்
  10. நெய் 4ஸ்பூன் ஆயில் 3 ஸ்பூன்
  11. முந்திரி 6 தக்காளி ஒன்று
  12. தனியா தூள் 2 ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்து வைக்கவும். ஒரு குக்கரில் 3 ஸ்பூன் ஆயில் 2 ஸ்பூன் நெய் விட்டு சிறிது சோம்பு பட்டை பிரிஞ்சி இலை கிராம்பு ஏலக்காய் அன்னாசி மொக்கு தாளிக்கவும். பச்சை மிளகாய் ஒன்று கீறிப் போட்டு தாளிக்கவும்

  2. 2

    மசாலா பொருட்கள் வதங்கியதும் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது மிக்ஸியில் நைசாக அரைத்த தக்காளி வெங்காயம் கலவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.காய்கறிகளை சேர்த்து இரண்டு ஸ்பூன் தனியா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து சுருள வதக்கவும். சீரக சம்பா அரிசி இருமுறை கழுவி ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மீது ஒரு வாணலி வைத்து குக்கரில் உள்ள சாதத்தில் கொட்டி மெதுவாக கிளறி விடுங்கள் அடுப்பு சிம்மில் இருக்கட்டும். சுவையான உதிரியான பிரியாணி தயார்.

  4. 4

    ஒரு சிறிய வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு மூன்று ப்ரட் ஸ்லைஸ் கட் பண்ணி அதில் போட்டு நெய்யில் வறுத்து பிரியாணி மேல் தூவி விடவும். 6 முந்திரி நெய்யில் வறுத்து தூவி விடவும்.சுவையான வெஜ் பிரியாணி தயார். ஒரு பெரிய.வெங்காயம் பொடியாக நறுக்கி தயிரில் கலந்து பச்சை மிளகாய் கொத்தமல்லித்தழை உப்பு சேர்த்து கலந்து தயிர் பச்சடி செய்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes