சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை கழுவி, தக்காளி,ஆமணக்கு எண்ணை, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விடவும். ***ஆமணக்கு எண்ணை சேர்ப்பதால் நல்ல மஞ்சள் கலர் கிடைக்கும். தண்ணீர் கெட்டியாகமாறும்.
- 2
புளியை சூடு நீரில் சேர்த்து நன்கு பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பூண்டு தட்டி போட்டு, பச்சை, வற்றல் மிளகாய் நறுக்கி சேர்த்து வதக்கவும். ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து, வேகவைத்து வைத்துள்ள பருப்பு,தக்காளியை நன்கு மசித்த தண்ணீர், புளிச்சாறு, மேலும் கொஞ்சம் தண்ணீர், தேவையான அளவு உப்பு கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
- 4
கொதிக்க ஆரம்பித்தவுடன், சீரகம், மிளகுத் தூள் சேர்த்து, நுரைத்து வரும்போது, மல்லி இலை தூவி இறக்கிவிடவும். ***நிறைய நேரம் கொதிக்க விடக்கூடாது. சுவை மாறிவிடும். நுரைத்து வரும் போது இறக்கிவிடவேண்டும்.
- 5
இப்போது கண்கவர் மஞ்சள் நிறத்தில், சுவையான துவரம் பருப்பு ரசம் சுவைக்கத்தயார்.
- 6
வெள்ளை சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையோ தனிச்சுவை. அனைவரும் செய்து ருசிக்கவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.#samabarrasam Renukabala -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
பச்சை புளி ரசம் (Raw tamarind rasam)
கிராமப்புறதில் மற்றும் பழங்காலத்து மக்களிடம் பிரசித்தி பெற்றது பச்சை புளி ரசம். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். நிமிஷத்தில் செய்துவிடலாம்.சமைக்கத்தேவை இல்லை. Renukabala -
-
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது . Shyamala Senthil -
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari
More Recipes
கமெண்ட் (6)