டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)

Leena Preethi
Leena Preethi @cook_25058148

டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை கிலோ சிக்கன்
  2. ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள்
  3. 4 டீஸ்பூன்சோயா சாஸ்
  4. 2 தேக்கரண்டிசில்லி சாஸ்
  5. 4 தேக்கரண்டிதக்காளி சாஸ்
  6. ஒரு தேக்கரண்டிசர்க்கரை
  7. ஒன்றுமுட்டை
  8. 4 தேக்கரண்டிசோள மாவு
  9. கால் கப்முந்திரி பருப்பு
  10. ஒரு தேக்கரண்டிநறுக்கிய இஞ்சி
  11. பாதிகுடை மிளகாய்
  12. எண்ணெய்
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.

  2. 2

    அத்துடன், மிளகுத்தூள், சோயா சாஸ், முட்டை, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.

  3. 3

    பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

  4. 4

    மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், உடைத்த முந்திரி போட்டு வறுக்கவும்.

  5. 5

    அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் துகள், பொடியாக நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  6. 6

    தொடர்ந்து, சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  7. 7

    பின்னர், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  8. 8

    கொதிவந்ததும், தண்ணீரில் கரைத்த சோள மாவு சேர்த்து கலக்கவும்.
    இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும், பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.

  9. 9

    அட்டகாசமான சுவையில் டிராகன் சிக்கன் தயார்..!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Leena Preethi
Leena Preethi @cook_25058148
அன்று

Similar Recipes