பீர்க்கங்காய் பால் சூப்
#cookwithfriends#Manju
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஸ்பூன் நெய்யில் மிளகு சீரகம் வறுத்து நைசாக பொடி செய்து வைக்கவும்.பீர்க்கங்காயை கழுவி லேசாக தோல் சீவி நறுக்கி வைக்கவும். ஒரு தக்காளி கழுவி நறுக்கி வைக்கவும் பூண்டு ஆறு பல் உரித்து.வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் பாதி அளவு நறுக்கி வைக்கவும்.
- 2
நறுக்கிய காய்கறிகளை ஒரு குக்கரில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும். வெந்ததும் இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் சேர்த்து மைய அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடு செய்து இறக்கவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும். வெதுவெதுப்பான பால் ஒரு டம்ளர் அதில் ஊற்றி கலந்து விடவும்.
- 3
நைசாக பொடித்த மிளகு சீரகம் பொடி மேலே தூவி விடவும். மல்லி தழை தூவவும். சுவையான பீர்க்கங்காய் பால் சூப் தயார்
- 4
பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது.சர்க்கரை அளவை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி வரும். வாரம் இருமுறையேனும் நமது உணவில் பீர்க்கங்காயை சட்னி, சாம்பார், சூப், பொரியல்,என சேர்த்து ஆரோக்கியமாக இருக்கலாம். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
இத்தாலியன் ஸ்டைல் கார்லிக் சூப் வித் கிரோட்டன்ஸ்
#cookwithfriends#subhashreeramkumar Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளு வித் வசம்பு சூப்
#cookwithfriends#indrapriyadharsiniகொள்ளு உடலை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் உபாதைகளையும் தீர்க்கும் அதுமட்டுமல்லாமல் சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாகும் வசம்பு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் விஷமுறிவு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளும் நீக்கும் அரிய மருந்தாகும் இவ்வாறு சூப் வைத்து குடிக்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் உபாதைகள் நீங்கும் Indra Priyadharshini -
-
-
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 1 ,தக்காளி 3,வேகவைத்து ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி ,அரை ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்துகடைந்து வெங்காயம்10,பெரிய வெங்காயம் 1,பெருங்காயம் போட்டு வதக்கவும் .பின் புளி கரைத்து கொதித்துஉப்பு சீரகம் போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel
More Recipes
கமெண்ட் (4)