நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)

Manju Murali
Manju Murali @cook_24781121

#cookwithfriends
என் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.
#cookwithfriends

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 சர்விங்
  1. 30 கிராம் வறுத்த நிலக்கடலை
  2. 10 கிராம் பாதாம்
  3. 1/2 லிட்டர் பால்
  4. 50 கிராம் சர்க்கரை
  5. 100 கிராம் கண்டெண்ஸ்டு மில்க்
  6. 4 பொடித்த ஏலக்காய்
  7. தேவைக்கேற்ப நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை
  8. சிறிதுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். பாதாம் பருப்பை சுடு நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் அதன் தோலை உரித்து கொள்ளவும். வறுத்த நிலக்கடலை தோலை உரித்து கொள்ளவும்.

  2. 2

    ஊற வைத்த பாதாம் மற்றும் நிலக்கடலையை சிறிது பால்(25மிலி) சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கணமான பாத்திரத்தில் மீதி உள்ள 475மிலி பால் மற்றும் 100மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    பால் கொதி நிலை வந்த பின், அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும். மிதமான தீயில் விழுதின் பச்சை வாசம் விலகி சிறிது கெட்டி பதம் வரும் வரை கிளறியவாறு கொதிக்க விடவும்.

  5. 5

    இப்போது சர்க்கரை, கண்டெண்ஸ்டு மில்க் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும். மேலும் சிறிது நேரம் கலக்க கீர் கெட்டி பதம் அடையும்.

  6. 6

    இப்போது பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த கலந்த பருப்பை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

  7. 7

    சுவையான நிலக்கடலை கீர் தயார். சூடாகவோ அல்லது குளிராகவோ பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Murali
Manju Murali @cook_24781121
அன்று

Similar Recipes