தேவையான பொருட்கள்

  1. .துவரம் பருப்பு - 1 கப்
  2. .பீட்ரூட் - 100 கிராம்
  3. 1தக்காளி -
  4. .புளி - நெல்லிக்காய் அளவு
  5. சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
  7. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  8. மல்லித் தழை - சிறிது
  9. உப்பு - தேவையான அளவு
  10. .தண்ணீர் - 1 கப் (200 ml)
  11. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  12. கறிவேப்பில்லை - சிறிது
  13. எண்ணெய் - 2 ஸ்பூன்
  14. 3சின்ன வெங்காயம் -
  15. தாளிக்க -
  16. கடுகு - 1 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பு, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

  2. 2

    புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    பீட்ரூட், தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் 1 கப் தண்ணீர், காய்கறி, தக்காளி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்

  4. 4

    பின்னர் சாம்பார் பொடியை சேர்த்து 8-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
    பின்னர் புளி தண்ணீரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  5. 5

    இப்பொது மசித்த பருப்பை சேர்த்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தழையை தூவவும்.

  6. 6

    சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து இதை சாம்பாரில் சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes