அன்னபூர்ணா டிபன் சாம்பார்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

அன்னபூர்ணா டிபன் சாம்பார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. துவரம் பருப்பு-150கிராம்
  2. பெருங்காயத் தூள்-1\4ஸ்பூன்
  3. மஞ்சள் தூள்-1\4ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம்-10-15
  5. தக்காளி-1
  6. புளி-1நெல்லிக்காய் அளவு
  7. முருங்கைக்காய்-1
  8. கத்தரிக்காய்-1
  9. கேரட்-1
  10. தேங்காய் துருவல்-2டேபிள் ஸ்பூன்
  11. பொட்டுக்கடலை-1டேபிள் ஸ்பூன்
  12. வர மிளகாய்-5
  13. பச்சை மிளகாய்-2
  14. சீரகம்-1\4ஸ்பூன்
  15. கடுகு, சீரகம், உளுந்து, வெந்தயம் பெருங்காயத் தூள்-தலா 1\4 ஸ்பூன்
  16. கறிவேப்பிலை-1கொத்து
  17. கொத்தமல்லி தழை-1கைப்பிடி
  18. சாம்பார் பொடி-2டேபிள் ஸ்பூன்
  19. எண்ணெய்-தேவையான அளவு
  20. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காய்களையும், தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க தேங்காய் துருவல், வரமிளகாய் 3, சீரகம், பொட்டுக்கடலை எடுத்துக்கொள்ளவும். தாளிக்க தேவையானவை தனியாக எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    குக்கரில் துவரம் பருப்பை எடுத்து நன்கு கழுவி அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து 2 விசில் விடவும்

  3. 3

    வேறொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் நறுக்கிய காயையும், தக்காளியையும் சேர்க்கவும். காய்க்கு மட்டும் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்

  4. 4

    அரைக்கக் கொடுத்துள்ளதை தனியே அரைத்து விழுதாக எடுக்கவும். காய் அரைப் பதம் வெந்ததும் சாம்பார் பொடியை சேர்க்கவும்

  5. 5

    பிறகு அரைத்த தேங்காய் விழுதையும், புளிக் கரைசலையும் சேர்த்து, ஒரு கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் கழுவி காயுடன் ஊற்றவும்

  6. 6

    மீண்டும் நன்கு கொதிக்க விடவும். கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைத்த துவரம்பருப்பை சேர்க்கவும். நன்கு கிளறி விட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

  7. 7

    மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். பிறகு வரமிளகாய், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, முழு வெங்காயம், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்

  8. 8

    இப்போது சாம்பார்க்கு தேவையான உப்பை சேர்த்து அதனுடன் தாளிதத்தை சேர்த்து இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  9. 9

    சுவையான, சத்தான அன்னபூர்ணா டிபன் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes